ஹாட் நியூஸை ஷாட்டா படிக்க: ஸ்பீக்கர் பாக்ஸ்
அடுத்த 3 வருடத்திற்கு முதலீடு என்ற பேச்சுக்கே இடமில்லை..!
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தின் கேஜி பேஸின் இயற்கை எரிவாயு படுகையில் மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி-க்கு சொந்தமான இடத்தில் பல ஆயிரம் டன் இயற்ரகை எரிவாயுவைத் திருடியுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் அடுத்த 3 வருடத்திற்கு எவ்விதமான புதிய முதலீடும் இருக்காது என இக்குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ஆம் தேதி இக்குழுமத்தின் பங்குதாரர்கள் மத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட முதலீடு குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Reliance #MukeshAmbani
ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் சேர்ப்பு 35% சரிவு..!
ஐடி நிறுவனங்கள் சரிவு, ஐடி துறையில் ஊழியர்களுக்கு ஆபத்து எனச் செய்திகள் வந்தாலே இத்துறை சார்ந்த மக்கள் கொந்தளிக்கின்றனர். ஆனால் உண்மையை இத்துறை சார்ந்தவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவின் 4 முக்கிய ஐடி நிறுவனங்களில் செப்டம்பர் மாத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஊழியர்கள் சேர்ப்பு அளவு 35 சதவீதம் குறைந்துள்ளது.
ஜூலை-செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் காக்னிசென்ட், டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 24,094ஆக உள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 37,065ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
4 நிறுவனங்களில் காக்னிசென்ட் ஊழியர்களை அதிகளவில் சேர்த்துள்ளது. விப்ரோ மிகவும் மோசமான எண்ணிக்கையில் ஊழியர்களைச் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் ஆட்டோமேஷன் மற்றும் இன்னோவேஷன் ஆதிக்கத்தால் தான்.
#IT #TCS #Infosys #Cognizant #Wipro
ஜாகுவார் கார் விற்பனை அமோகம்..!
பிரிட்டன் நாட்டின் முன்னணி ஆடம்பர் கார் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்டுரோவர் நிறுவனம் அக்டோபர் மாதத்தில் 46,325 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த அளவு கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஜாகுவார் லேண்டுரோவர் நிறுவனத்தின் விற்பனை உரிமையை டாடா குழுமம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
#Jaguar #Landrover #Tata
5 வருடச் சரிவில் சீனா அன்னிய செலாவணி..!
உலகில் அதிகளவில் அன்னிய செலாவணி வைத்திருக்கும் நாடுகளில் முதல் இடத்தில் இருக்கும் சீனா கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து இருப்பை இழந்து வருகிறது.
இதனால் அக்டோபர் மாத முடிவில் 45.7 பில்லியன் டாலர் குறைந்து அன்னிய செலாவணி இருப்பு அளவு 3.12 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது கடந்த 2011ஆம் ஆண்டின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
#FDI #Forex
மசாலா பத்திரங்கள்
2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, அடுத்த 3 மாதத்தில் லண்டன் பங்குச்சந்தையில் ரூபாய் மதிப்பு வடிவிலான 600 மில்லியன் பவுண்ட் மதிப்புடை 4 மசாலா பத்திரங்கள் பட்டியலிடப்படும் எனத் திங்கட்கிழமை தெரிவித்தார்.
#MasalaBonds
ரிசர்வ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் தலைவர்..!
மத்திய வங்கியான ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஜி.மகாலிங்கம் தனது ஓய்வை அறிவித்த காரணத்தால் புதிய நிர்வாக இயக்குநராக எம்.ராஜேஷ்வர் ராவ் அவர்களை நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிர்வாகத் தலைவர் என்ற பொறுப்பில் இனி ராஜேஷ்வர் ராவ் புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை, நிதியியல் சந்தை இயக்கத் துறை மற்றும் சர்வதேச துறையைக் கவனிப்பார்.
#RBI
லாபத்தில் 13% சரிவு.. வராக் கடனால் ஐசிஐசிஐ வங்கி பாதிப்பு..!
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் லாபத்தில் மட்டும் சுமார் 12.8 சதவீதம் அளவிலான சரிவை சந்தித்துள்ளது. இதன் மூலம் இவ்வங்கியின் லாப அளவுகள் 2,979 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
வருவாய் அளவு 25,138 கோடியில் இருந்து 32,435 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதனுடன் வராக்கடன் அளவு 3.77 சதவீதத்தில் இருந்து 6.82 சதவீதமாக உயர்ந்துள்ளது.
#ICICI #Q2
USelection2016
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications