உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவை அடுத்த 4 வருடத்திற்கு ஆளப்போவது யார்..? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இன்று நடக்க உள்ளது.
பொதுவாக அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் போது அந்நாட்டின் பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் நாணய சந்தையும் அதிகளவிலான பாதிப்புக்குள்ளாகும்.
2012ஆம் ஆண்டு தேர்தலின் போது சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு 0.50 சதவீதம் குறையும் போது, இந்திய ரூபாய் மதிப்பு 0.55 சதவீதம் குறைந்தது.

2008ஆம் ஆண்டு தேர்தலின் போது எஸ்&பி 500 குறியீடு 10.6 சதவீதம் சரிந்த நிலையில், டாலர் மதிப்பு 2.8 சதவீதம் அளவிலான சரிவை சந்தித்தது. இக்காலகட்டத்தில் ரூபாய் மதிப்பு 0.84 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அடுத்த ஒரு வாரத்திற்குச் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.63 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications