நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. ஏடிஎம் இயந்திரமும் இயங்காது. பண பிரமாற்றங்கள் அதிகளவில் முடக்கம்.
மத்திய அரசு இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என நவம்பர் 8ஆம் தேதி இரவு அறிவித்த உள்ளது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் அதிர்ந்துபோய் உள்ளனர்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி மக்களின் அன்றாட பண புழக்கத்தில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
வங்கிகள் விடுமுறை
புதன்கிழமை (நவம்பர் 9ஆம் தேதி) இந்தியாவில் தனியார், பொதுத்துறை, கூட்டுறவு, கிராம மற்றும் ஊரக வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் இயந்திரங்கள்
அதேபோல் ஏடிஎம் இயந்திரம், பணம் டெப்பாசிட் செய்யும் இயந்திரம் என அனைத்தும் இன்று செயல்படாது. ஆனால் இணையம் மற்றும் மொபைல் வங்கியியல் இயங்கும்.
வங்கிகளின் உள் வேலைகள்
வங்கிகள் இன்று ஒரு நாளுக்குள் தனது கஜானா மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வேலைகளைச் செய்ய உள்ளது.
2,000 ரூபாய் மட்டுமே..
அதன்பின் நவம்பர் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான காலத்திற்கு ஏடிஎம் இயந்திரங்களில் வெறும் 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் நவம்பர் 19ஆம் தேதி முதல் இந்த அளவுகோல் 4000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
வங்கியில் பணம் எடுத்தல்..
மேலும் வங்கி வைப்புக் கணக்கில் இருந்து வித்டிரா அளவு நவம்பர் 9ஆம் தேதி முதல் ஒரு நாளுக்கு 10,000 ரூபாயாகவும், ஒரு வாரத்திற்கு 20,000 ரூபாய் வரை மட்டுமே அனுமதி அளிக்கிறது.
ஆர்பிஐ
நவம்பர் 10ஆம் தேதி முதல், கார்பரேட் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனகள், அறக்கட்டளைகள், என அனைத்துத் தரப்பினரும், தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு ரிசர்வ் வங்கி கிளையிலும் மொத்தமாக மாற்றிக்கொள்ளலாம்.
மாற்றப்படும் தொகை அவர்களது வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகள்
மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணம் மட்டும் அல்லாமல் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை முழுமையாகக் குறைக்க முடியும்.
ரத்தகளறி
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications