உலகில் உள்ள எல்லா 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வெறும் 50 நாட்களுக்குள் மாற்ற முடியுமா..? மொத்த எவ்வளவு இருக்கு தெரியுமா..? 14 லட்சம் கோடி ரூபாய்..!
உலகம் முழுவதும் இந்திய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் சுமார் 14 லட்சம் கோடி அதாவது 217 பில்லியன் டாலர் அளவிலான தொகை புழக்கத்தில் உள்ளது. இப்படி இருக்கும்போது பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்திய நாணயங்களில் அதிக மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. அது வெறும் காகிகதம் தான் என்று கூறிவிட்டார்.
அடுத்த 50 நாட்களுக்குள் இதை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ள வேண்டும் என உத்திவிட்டுள்ளார் மோடி. உண்மையிலேயே இது சாத்தியமா..? அல்லது வெறும் கண்துடைப்பு தானா..? #ModiFightsCorruption
செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி திடீரென மக்களிடம் பேசினார். அப்போது அடுத்த 50 நாட்களுக்குள் உலகில் இருக்கும் அனைவரும் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி அல்லது தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ள வேண்டும். இன்று இரவு 12 மணி முதல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பினால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் நமக்குத் தினமும் உணவு அளிக்கும் விசாயிகள் வரை அனைத்து மட்டங்களிலும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 500 ரூபாய் நோட்களாக 7.85 லட்சம் கோடி, 1,000 ரூபாய் நோட்டுகளாக 6.33 லட்சம் கோடி ஆக மொத்த 14.18 லட்சம் கோடி ரூபாய் உலகளவில் புழக்கத்தில் உள்ளது. எதற்காக இந்த 50 நாட்கள் என்ற குறுகிய காலகட்டம்..? இதன் பின்னால் ஒழிந்திருக்கும் காரணங்கள் என்ன..? நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்தி அறிவிப்பின் மூலம் கருப்ப பணம் வைத்திருக்கும் தனிநபர்களுக்கு இது மிகப்பெரிய சிக்கலாக மாறும். கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போருக்குத் தற்போது இரண்டு வழிதான். ஒன்று தாங்களாக வங்கிக் கணக்கில் டெப்பாசிட் செய்வது அல்லது நவம்பர் 24ஆம் தேதிக்குள் மாற்றிக்கொள்வது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளபடி ஒரு நாளுக்கு 4,000 முதல் 60,000 வரையிலான பணத்தை மாற்றிக்கொள்ளலாம் இந்தக் கட்டுப்பாடு நவம்பர் 24ஆம் தேதி வரைதான். இதன் பின் இதன் கட்டுப்பாடு தளர்க்கப்படும். இதன் மூலம் யார் வேண்டுமானாலும், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பணத்தை வங்கிகளிலோ அல்லது தபால் நிலையங்களிலோ மாற்றிக்கொள்ள முடியும். நவம்பர் 10-24 நாட்கள் என்றாலே ஒருவர் இந்த 15 நாட்களுக்குள் 9 லட்சம் வரையிலான தொகையை மாற்ற முடியும். மத்திய நிதியமைச்சகம் மற்றும் வருமான வரித்துறை இணைந்து அறிவித்த IDS திட்டம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முடிந்த நிலையில். இத்திட்டத்தின் மூலம் போதிய அளவிலான பலனை அனுபவிக்க முடியாத காரணத்தினாலேயே மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லத்தகாத ஒரு வெத்துக் காகிதம் என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். IDS திட்டம்- இதுவரை மக்கள் மறைத்து வைத்திருந்த கருப்புப் பணம் மற்றும் மறைக்கப்பட்ட வருமானத்தை அரசுக்குத் தெரிவிக்கும் திட்டம் தான் இது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாகப் பணத்திற்காக ஒட்டு போடும் மனநிலை அதிகளவில் உருவாகியுள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் காலங்களில் 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகளவில் இருப்பதாக மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. இதன் வாயிலாகவே இந்த அறிவிப்பை மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் 2011-2016 வரையிலாகக் காலத்தில் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 500 ரூபாய் நோட்டுகள் 76 சதவீதமும், 1,000 ரூபாய் நோட்டுகள் 109 சதவீதம் அளவிலான புழக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி நவம்பர் 10ஆம் தேதி முதல் புழக்கத்திற்குக் கொண்டு வரும் புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 நோட்டுகளில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் 2,000 ரூபாய் நோட்டுகளில் மட்டும் நேனோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ரிசர்வ் வங்கி இதனைத் தொடர்ந்து கண்காணிக்கும். இது, செயற்கைக்கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை எதிரொலிக்கக் கூடியது. எனவே செயற்கைக்கோள் மூலமாக மொத்தமாகச் சேமிக்கப்படும் பணத்தைக் கண்டுபிடித்து விடலாமாம். பூமிக்கு அடியில் 120 மீட்டர் வரை கொண்டு சென்று பதுக்கி வைத்தாலும் கூடக் காட்டிக் கொடுத்துவிடும் என்கிறார்கள். நரேந்திர மோடி இந்த அறிவிப்பை தடாலடியாக அறிவிக்கவில்லை. கடந்த 6 மாதமாகச் சரியான முறையில் திட்டமிட்டு, நாட்டின் மக்களுக்கு IDS திட்டத்தின் வாயிலாக வாய்ப்புகளை அளித்து, அதற்குள் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை வடிவமைத்து வங்கிகளுக்குக் கொண்டு சேர்த்த பின்னரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நரேந்திர மோடி. இரண்டு வருடங்களுக்கு முன்னரே மத்திய அரசு பழைய 500 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நிறுத்தியது. இதன் பரிமாற்றத்தின் போது சில மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. மோடியின் கூறும் வகையில் 50 நாட்கள் மிகவும் குறைவாக இருந்தாலும் சரி. நமக்குக் கிடைக்கும் அனைத்து வழிகளிலும் இதனைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நரேந்திர மோடி
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்
தனிநபர்கள்
சிறிய கணக்கு
IDS திட்டம்
தேர்தல்
ரூபாய் நோட்டுகள்
நேனோ சிப்
இது 6 மாத திட்டமாகும்..
பழைய ரூபாய் நோட்டுகள்
50 நாட்கள்
தங்கம் விலை
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications