இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ விஷால் சிக்கா அறிவித்த முதல் திட்டமே சூப்பர் ஹிட். வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு. ஆனால் ஊழியர்களுக்கு..?
நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், விஷால் சிக்கா தலைமையில் கடந்த 2.5 வருடத்தில் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தைக் கண்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களைப் போல் மாற்றங்கள் அனைத்தும் உயர்மட்ட நிர்வாகத்தில் மட்டும் அல்லாமல் இன்போசிஸ் நிறுவனத்தில் கடைநிலை ஊழியர்கள் முதல் உயர்மட்ட நிர்வாகம் வரையிலான மாற்றத்தைக் கொண்டு வருகிறார் விஷால் சிக்கா.
இந்த மாற்றங்களில் முக்கியத் திட்டமாகப் பார்க்கப்படுவது விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ-வாகப் பதவியேற்றிய பின் முதன்முதலாக அமல்படுத்த திட்டம் 'ஜீரோ டிஸ்டன்ஸ்'.
இத்திட்டத்தால் இன்போசிஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையில் திருப்தியின் அளவுகள் 10 வருட உயர்வை எட்டியுள்ளது. இதன் மூலம் இதுவரை எந்த ஒரு சீஇஓ செய்யாத ஒரு செயலை விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தில் காட்டியுள்ளார். இப்படி இந்தத் திட்டத்தில் என்ன இருக்கு.?
வாடிக்கையாளர் மகிழ்ச்சி
இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது இருக்கும் பிராஜெக்ட்களில் புதிய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளை இன்போசிஸ் ஊழியர்களே ஆராய்ந்து அனைத்தை வாடிக்கையாளர்களுக்க எடுத்துரைக்கும் திட்டம் தான் 'ஜீரோ டிஸ்டன்ஸ்'.
இதன் வாயிலாக 2016ஆம் ஆண்டு வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்துவதில் இன்போசிஸ் 10 வருட உயர்வைச் சந்தித்துள்ளது. இதற்கு முழுமுக்கிய காரணம் விஷால் சிக்கா.
விஷால் சிக்கா ஈமெயில்
இதுக்குறித்து விஷால் சிக்கா தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 2016ஆம் ஆண்டுக்கான வாடிக்கையாளர் திருப்தி குறித்த நபூருன் ஆய்வுகள் முன்கூடியே கிடைத்ததில் மிகிழ்ச்சி. 2016ஆம் ஆண்டில் கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளோம். என்று கூறினார்.
பிற முக்கிய மதிப்பெண்கள்
2016ஆம் ஆண்டில் வாடிக்கையாளர் பீட்பேக் மதிப்பெண்களிலும் கடந்த வருடத்தை விடவும் 12 புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ளது இன்போசிஸ்.
மேலும் CxO என்றும் கூறப்படும் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களின் உயர்மட்ட அளவுகளிலும் 7 புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ளது. இது இன்போசிஸ் வரலாற்றிலேயே அதிகமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பெண்கள்
வாடிக்கையாளர்களின் தங்களது பிராஜெக்ட்-இல் ஏற்படும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், மேம்பாடுகள் ஆகியவற்றை எவ்வளவு சிறப்பாகத் தீர்க்கிறது என்பதைப் பொருத்து இந்த மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது.
விஷால் சிக்கா அமல்படுத்திய இந்த ஜீரோ டிஸ்டன்ஸ் திட்டத்தின் வாயிலாகவே மதிப்பெண்களில் இப்படியொரு வளர்ச்சியை அடைந்துள்ளது.
புதிய திட்டங்கள்
2016ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களைச் சிறப்பான சேவை அளித்ததன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய திட்டங்களான MANA, ஜிரோ டிஸ்டன்ஸ் மற்றும் டிசைன் திங்கிகங் ஆகியவை பிரபலம் அடையத் துவங்கியுள்ளது. இதற்கு அனைத்திற்கும் காரணம் நாம் எல்லோரும் தான் எனவும் விஷால் சிக்கா தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தார்.
வெற்றி
இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது நிதி சேவை மற்றும் மேக்ரோஎக்னாமிக் பிரச்சனைகளை அதிகளவில் சந்திக்கும் இத்தகைய சூழ்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்திற்குத் தனது வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடித்தக்கது.
வளர்ச்சியில் தொய்வு
2016ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனம் இந்த ஆண்டுக்கான வளர்ச்சி அளவுகளை 2 முறை குறைந்துள்ளது. கடைசியாகக் குறைக்கப்பட்ட பின் 2016ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி 8-9 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது.
இம்மாத இறுதியில் இந்திய ஐடித்துறையில் 2016ஆம் ஆண்டு வளர்ச்சி குறித்துத் தனது ஆய்வின் முடிவுகளை நாஸ்காம் தெரிவித்துள்ளது.
பிற நிறுவனங்கள்
இதேபோன்ற திட்டங்கள் இன்போசிஸ் நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் பிற நிறுவனங்களும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
லாபமா..? நஷ்டமா..?


Click it and Unblock the Notifications