வீண் வதந்தியால் மக்கள் பதற்றம். உப்பு விலையில் எவ்விதமான உயர்வும் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு.
பிரதமர் நரேந்திர மோடி இனி இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில் இந்தியாவில் பணப்புழக்கம் அதிகளவில் பாதித்துள்ளது. காரணம் வங்கிகளிலும் போதிய பணம் இல்லாத காரணத்தினால் காலை 6 மணி முதல் வங்கி வாசலில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. ஏடிஎம் வாசலில் இரவு 1 மணிவரை மக்கள் 'வரிசை'யாகவும் அமைதியாகவும் காத்துக்கிடக்கின்றனர்.
இந்நிலையில் உத்திர பிரதேசம் மாநிலத்தில் நாட்டில் நிலவும் பணத் தட்டுப்பாட்டுக் காரணமாக உப்பு விலை 400 ரூபாயாக உயர்ந்துள்ளது என வதந்தி பரவியுள்ளது.

இதனால் மக்கள் மளிகைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்களில் உப்பு வாங்குவதற்காகக் கூட்டம் கூடினார். ஆனால் உண்மையில் எப்படி ஏதும் விலை கூடவில்லை.
இதுகுறித்து உத்திர பிரதேசம் மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், நாட்டில் உப்பு தட்டுப்பாடும் ஏதுமில்லை அதன் விலையும் உயரவில்லை. மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும் மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உப்பு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு எதுவும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே மக்கள் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் கேட்டுக்கொள்கிறது.


Click it and Unblock the Notifications