200% அபராதம் விதிப்பது எப்படி..? குழப்பத்தில் வருமான வரித் துறையினர்..!

கருப்பு பணம் வைத்திருப்போர் வருமான வரித்துறையிடம் இருந்து தப்ப முடியாது. சுத்தி சுத்தி செக் வைக்க திட்டம் தீட்டுகிறது வரி துறை கூட்டணியில் மத்திய அரசு.

பிரதமர் மோடி பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாள் முதல், மக்கள் தங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மாற்றுவதற்காக வரிசையில் நின்றுகொண்டு இருக்கின்றனர். அது ஒருபுறம் இருக்க..

மறுபுறம்.. கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் தற்போது, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கியுள்ள கடனை அதிகளவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மூலம் தீர்த்து வருகின்றனர்.

இதனால் வரி செலுத்தும் மக்களின் வருமானத்தில் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டறிவது எப்படி?, அதற்கான 200 சதவீத வரியை விதிப்பது எப்படி? என்றும் வருமான வரித்துறை குழப்பத்தில் உள்ளது.

கருப்புப் பணம்

கருப்புப் பணம்

இந்தியாவில் பிரதமர் மோடி பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில் சாமானியர்கள் (கருப்புப் பணம் இல்லாதோர்) தங்களிடம் இருக்கும் சில 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளில் நாள் முழுவதும் நின்று மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கணக்கில் காட்டாமல் பல லட்சங்கள் ஏன் சில பல கோடி ரூபாய்களை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாய் வைத்துள்ளனர், இதனை மாற்ற முடியாத காரணத்தால் இதனைச் செலவும் செய்யும் நோக்கில் புதிய திட்டத்துடன் பலர் இறங்கியுள்ளனர்.

 

வங்கிக் கடன் முதல் ஆடம்பர பொருட்கள்

வங்கிக் கடன் முதல் ஆடம்பர பொருட்கள்

அடுத்த 43 நாட்களுக்குள் அனைவரும் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்பதால் வங்கிகள் கடன் வாங்கி வர்த்தகம் செய்து வரும் அனைவரும் தற்போது வங்கிக் கடன் தீர்த்து வருகின்றனர்.

காரணம் வங்கிகள் கடன் தீர்க்க வருவோர்களிடம் 00 மற்றும் 1000 ரூபாய் தாள்களைப் பெறுகிறது.

இதனால் வருமான வரி செலுத்துவோர் கணக்கில் திடீர் வருமான உயர்வு தெரிகிறது. இதனை எப்படிக் கணக்கிட்டுக் கருப்புப் பணத்திற்கு 200 சதவீதம் வருமான வரியை விதிப்பது என்றும் வருமான வரித்துறையினர் குழப்பத்தில் மூழ்கியுள்ளதாக நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

மக்கள் இப்படி என்றால் நிறுவனங்கள் அதற்கு மேல். பிரதமரின் அறிவிப்புக்குப் பின் நிறுவனங்கள் சப்ளையர், பழைய கடன், உயர் அதிகாரிகளை ஊக்குவிக்கும் வண்ணம் கிளப், ஜிம், மற்றும் ஸ்பா-களில் மெம்பர்சிஷ் என அசத்துகிறது.

அபராதம் இல்லை..

அபராதம் இல்லை..

ஆனால் வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்படும் தொகைக்கு அபராதம் ஏதுமில்லை என வருமான வரித்துறை, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்படி என்றால் ஒருவர் தனது வங்கி வைப்பு நிதியில் 1 கோடி ரூபாய் டெப்பாசிட் செய்தால் 33 சதவீதம் வரி மட்டும் செலுத்திவிட்டு அதற்கான பலனை அனுபவித்தால் எப்படி. இப்படிப் பல கேள்விகள் 2017-18ஆம் கணக்கீட்டு ஆண்டில் கேள்விகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை வருமான விரி செலுத்துவோர் எளிமையாக `income from other source' குறிப்பிடுவார்கள் என அறியப்படுகிறது.

 

200 சதவீத வரி

200 சதவீத வரி

இப்படிக் கடந்த கால வருமான அறிக்கைக்கு முற்றிலும் புறம்பான முறையில் வருமானம் கணக்கில் வரும் அனைத்து வருமான வரி செலுத்துவோர் மீதும் 200 சதவீதம் வரி விதிக்கவே வருமான வரித்துறை திட்டமிட்டு வருகிறது.

அதிகாரிகள் கூட்டம்..

அதிகாரிகள் கூட்டம்..

இப்படிக் கணக்கிற்கு வரும் அதிகப்படியான வருமானம் உடையோர் வருமான வரித்துறையிடம் இருந்து தப்பினாலும், சேவைத்துறை, மறைமுக வரித் துறையினரிடம் இருந்து தப்ப முடியாது. அப்படி மீறினாலும், அதிக வருமானம் உடையோர் குறித்த தகவல்களை அமலாக்கத்துறைக்கு வருமான வரித்துறை அனுப்பிவிடும். இதனால் அரசு கண்ணில் இருந்து தப்புவது கடினம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+