2017 ஆம் ஆண்டு பயணம் செய்வதற்கான டிக்கெட்களை 799 ரூபாயில் முன்பதிவு செய்யலாம் என்று ஏர் ஏசியா அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு பயணம் செய்வதற்கான டிக்கெட்களை 799 ரூபாயில் முன்பதிவு செய்யலாம் என்று ஏர் ஏசியா அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
இந்தச் சலுகை விலை டிக்கெட்களை நவம்பர் 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். 2017, மே 1 முதல் 2018 பிப்ரவரி 6 வரை பயணம் செய்யலாம்.
799 ரூபாய் டிக்கெட்
சலுகை விலையைக் குறைந்தது 799 ரூபாய் என அறிவித்துள்ள ஏர் ஏசியா இந்த கட்டணத்தில் கவுகாத்தி-இம்பால் வழித்தடத்தில் மட்டும் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
கொச்சியில் இருந்து பெங்களுரூவுக்கும், ஹைதராபாத்தில் இருந்து பெங்களுரூ செல்ல 999 ரூபாயும், ஆஃபர் கட்டணமாக உள்ளது.
பிற வழித்தடங்கள்
பெங்களுரூவில் இருந்து கோவா மற்றும் பெங்களுரூவில் இருந்து விசாகபட்டினம் செல்ல 1,299 ரூபாயும், ஹைதராபாத்தில் இருந்து கோவா செல்ல 1,599 ரூபாயும், கொச்சியில் இருந்து ஹைதராபாத் செல்ல 1,999 ரூபாயும், டெல்லியில் இருந்து பெங்களுரூ செல்ல 2,499 ரூபாயும் என டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் ஏசியா விமான சேவை
விமான போக்குவரத்து சேவை மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் இது போன்ற சலுகை விலை டிக்கெட்களால் மேலும் தேவையை அதிகரிக்கிறது.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 5.89 லட்சம் பயணிகள் ஏர் ஏசியா விமான சேவையை பயன்படுத்தியுள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 42 சதவீத பயணிகள் அதிகரித்துள்ளது என ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய வழித்தடம்
மேலும் இந்த காலாண்டில் மட்டும் ஏர் ஏசியா நிறுவனம் பெங்களூர்-கவுகாத்தி, பெங்களூர்-ஹைதெராபாத் மற்றும் ஹைதெராபாத்-கோவா போன்ற புதிய வழித்தடங்களில் தங்களது சேவையை துவங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications