14 வருட உயர்வை சந்தித்த டாலர் மதிப்பு: இந்திய ரூபாய் மதிப்பின் நிலை என்ன..?

ரூபாய் மதிப்பு மற்றும் சென்க்ஸ் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறுவதும் எனப் பார்க்கப்படுகிறது.

டொனால்டு டிரம்ப்பின் வெற்றிக்குப் பிறகு உலக சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூபாய் மதிப்பு மற்றும் சென்க்ஸ் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறுவதும் எனப் பார்க்கப்படுகிறது.

14 வருட உயர்வை சந்தித்த டாலர் மதிப்பு: இந்திய ரூபாய் மதிப்பின் நிலை என்ன..?

அதே நேரத்தில் அமெரிக்காவின் டாலர் மதிப்போ உலக நாணய சந்தையில் 14 வருடத்தின் உயர்வைச் சந்தித்துள்ளது. இது குறித்த சில விரிவான தகவல்களை நாம் இங்குப் பார்ப்போம்.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

செவ்வாய்க்கிழமையான இன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 50 பைசா சரிந்து 67.75 ரூபாயாக உள்ளது. கடந்த ஐந்து மாதத்தில் இதுவே மிகவும் குறைவான மதிப்பாகும்.

உலகில் பெரும் மதிப்பு உடைய ஆறு நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பு 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

 

டிரம்ப்பின் வெற்றிக்குப் பிறகு

டிரம்ப்பின் வெற்றிக்குப் பிறகு

டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்கத் துவங்கிவிட்டனர். இதனால் 1,500 கோடி ரூபாய் வரையிலான வெளிநாட்டு முதலீடுகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிரம்ப் வெற்றி பெற்ற உடன் சென்செக்ஸ் 5 சதவீதமும், ரூபாயின் மதிப்பு 1.7 சதவீதமும் சரிந்தது. இதேப் போன்று ஜப்பானின் பங்குச் சந்தையும் 5 சதவீதம் சரிவை சந்தித்தது.

 

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நொட்டுகள்

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நொட்டுகள்

இந்தியாவில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நொட்டுகளை திரும்பப் பெற்றுவருவதும் சந்தை அழுத்தத்தில் உள்ளதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. இன்னும் குறுகிய காலத்தில் இந்திய பொருளாதாரம் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

பங்குச் சந்தையும் நாணய மதிப்பும்

பங்குச் சந்தையும் நாணய மதிப்பும்

நடுப்பகல் 1:40 மணிநேரத்தின் படி மும்பை பங்குச் சந்தை 313.87 புள்ளிகள் சரிவுடனும், தேசிய பங்குச் சந்தை 124 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.78 ஆக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+