பழைய நோட்டுகளை மாற்ற வரும்போது அடையாள சான்று நகல்கள் பெறாமல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பல தலைமை வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற வரும்போது அடையாள சான்று நகல்கள் பெறாமல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விளக்கத்தை மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது அடையாளச் சாண்றுகளின் அசலை காண்பித்தால் மட்டும் போதும் என்றும் நகல் ஏதும் சமர்ப்பிக்க தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவரும் இதை உறுதி செய்துள்ளார் மேலும் வங்கிகளுக்கு கோரிக்கை படிவத்தில் உள்ள கேள்விகளில் அசல் நகலில் உள்ள விவரங்கள் மட்டும் தான் தேவை என்றும் தெரிவித்தார்.
இதுவரை பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல வங்கிகள் அடையாள சான்றுகளின் நகல் இல்லாமல் பணத்தை வழங்கவில்லை. சில வங்கி கிழைகள் மட்டும் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பாமல் தேவையான விவரங்களை பெற்றுக் கொண்டு பணத்தை மாற்றி அளித்துள்ளனர்.
சில வங்கிகள் இரண்டு முறைகளையும் கடைப்பிடித்து உள்ள்னர். லக்ஷ்மி விலாஸ் வங்கியின் மூத்த அதிகாரி வித்யாசாகர் இது குறித்து தெரிவிக்கையில் எங்கள் வங்கியில் கணக்கு இல்லாதவர்களிடம் நகல்களை பெற்றுக் கொண்டதாகவும், கணக்கு வைத்துள்ளவர்களிடம் பெயர் கணக்கு வைத்துள்ள கிளைகளின் பெயர் மற்றும் கையெளுத்தை மட்டும் பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
நவம்பர் 8 ஆம் தேதி வெளியான அரசின் அறிக்கையில் பழைய நோட்டுகளை எந்த வங்கிகளில் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என்றும், அந்த வங்கியில் கணக்கு இல்லை என்றால் கோரிக்கை விண்ணப்பத்த்டுடன் அடையாள சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல தபால் அலுவலகங்களில் மாற்ற செல்லும் போது சேமிப்பு கணக்கை கண்டிப்பாக துவங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications