500,1000 ரூபாய் தடைக்கு பின் மத்திய அரசின் மிகமுக்கிய முடிவு.
டெல்லி: இந்திய மக்கள் மத்தியில் புகையிலை பயன்பாட்டைக் குறைக்கப் பல்வேறு முயற்சிகளைச் செய்து வரும் மத்திய அரசு தற்போது மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான புகையிலை தயாரிக்கும் நிறுவனங்கள் அன்னிய முதலீட்டு வாயிலாக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இனியும் இத்துறை அன்னிய முதலீட்டால் வளர்ச்சி அடையக் கூடாது என்று மத்திய அரசு புகையிலை தயாரிப்புத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு முழுமையான தடையை அறிவித்துள்ளது.
நாடாளுமன்றம்
இந்திய புகையிலை தயாரிப்பில் துறையில் டிரேட்மார்க் அல்லது உரிமையின் வாயிலாகச் செய்யப்படும் அன்னிய முதலீட்டை முழுமையாகத் தடை செய்வதற்கான இறுதி அறிக்கையைத் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் வைத்துள்ளது.
முழுமையான அறிவிப்பு
இந்தியாவில் புகையிலை தயாரிப்புக்கு அன்னிய முதலீடு ஏற்கனவே தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது பிரான்சைஸ், டிரேட்மார்க், பிராண்ட் பெயர், நிர்வாக ஒப்பந்தம், மற்றும் தொழில்நுட்ப இணைப்பு என அனைத்து வகையிலும் அன்னிய முதலீட்டுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது என மத்திய அரசின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முக்கிய நிறுவனங்கள்
சுகாதாரம் மற்றும் நிதியமைச்சகம் இணைந்து ஆலோசனை செய்யதப்பின் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் அதற்கான முழுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஒப்புதலாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மசோதா ஒப்புதல் பெற்றால் அன்னிய முதலீட்டின் தடை காட்பேரே பிலிப்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படும்.
ஒட்டைகள்
புகையிலை தயாரிப்பில் அன்னிய முதலீட்டை முழுமையாகத் தடுக்கச் சந்தையில் இருக்கும் அனைத்து ஓட்டைகளையும் அடைக்கத் திட்டமிட்டுள்ளோம் என அரசு அதிகாரி தெரிவித்தார்.
புகையிலை பயன்பாட்டுக்குத் தடை..
இந்தியாவில் புகையிலை பயன்பாட்டைக் குறைக்கச் சிகரெட், பீடி, பான் மசாலா போன்ற அனைத்துப் புகையிலை பொருட்களின் மீதும் அரசு அதிகளவிலான வரியை விதித்தாலும், பயன்பாட்டு அளவு அதிகளவில் குறைக்க முடியவில்லை. இதனால் அரசு தனது கட்டுப்பாடுகளைப் புகையிலை தயாரிக்கும் நிறுவனங்கள் பக்கும் திருப்பியுள்ளது.
பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் காட்பிரே பிலிப்ஸ் பங்குகள் 0.33 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேபோல் ஐடிசி, என்டிசி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் பாதிப்படைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications