8 ஆம் தேதி முதல் ரூபாய் நோட்டுகள் பற்றி பேஸ்புக், வாட்ஸ் ஆப் பொன்ற சமுக வலைத்தளங்களில் பல வதந்திகள் வெடித்துச் சிதறின.
இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் சமுக வலைத்தளங்கள் ஆரம்பித்த காலங்களில் இருந்து வதந்திகள் பரவுவது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
இது போன்று சென்ற 8 ஆம் தேதி முதல் ரூபாய் நோட்டுகள் பற்றி பேஸ்புக், வாட்ஸ் ஆப் பொன்ற சமுக வலைத்தளங்களில் பல வதந்திகள் வெடித்துச் சிதறின.
அவற்றில் சிலவற்றை இந்திய செய்தி பீரோ வதந்திகளும் ஆனால் என்ன நடக்கிறது என்றும் அறிக்கை ஒன்றைத் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ள வதந்திகள் பற்றி இங்குப் பார்ப்போம்.
500 மற்றும் 1000 ரூபாய்க்கு அடுத்து 100 மற்றும் 50 ரூபாய்
வதந்தி: 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை முழுவதுமாக மாற்றிய பிறகு 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதைப் பற்றி மோடி அறிவிப்பார்.
உன்மை: இது ஆதாரம் அற்றது என்றும் 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை மாற்றும் எண்ணம் ஏதும் அரசுக்கு எல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில் அதிபர்களுக்கும் கட்சியினருக்கும் முன்பே இது தெரியும்?
வதந்தி: 500 மற்றும் 1000 ரூபாய் முன்பே மாறப்போகிறது என்று தொழில் அதிபர்களுக்கும் அரசியல் கட்சியினருக்கும் முன்பே தேரியும்?
உன்மை: இது குறித்த விவரங்கள் யாருக்கும் முன்கூடியே தெரிய வாய்ப்பில்லை, அரசு யாருக்கும் இது குறித்த தகவலை அளிக்கவில்லை முழுவதும் இரகசியமாகவே இருந்தது.
செயல்படுத்தக்கூடிய செலவு அதிகம்
வதந்தி: புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றும் செலவு இதன் மூலம் பெறப்படும் பயனை விட அதிகம்.
உன்மை: கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பதை வெளியில் கொண்டுவருவதினால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி மேலும் வளர்ச்சி அடையும். இதனால் பாதிக்கப்படுவோர் ஏழை மற்றும் நடுத்தர வற்க மக்களைவிடப் பிறர் மட்டும் தான்.
இதுவெல்லாம் சும்மா
வதந்தி: புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது வீணான வேலை. கருப்புப் பணத்தை மாற்ற மக்கள் மாற்று வழியைப் பயன்படுத்துவார்கள்.
உன்மை: பணம் மாற்றும் ஏஜென்சிகள் அனைத்தும் கண்காணிப்பில் உள்ளன, பினாமி பரிவர்த்தனை, வெளிநாட்டுப் பரிவர்த்தனை அனைத்தும் கண்காணிக்கப்படு வருகின்றன.
புதிய நோட்டுகளில் சிப்
வதந்தி: பணம் எங்கு இருக்கிறது என்று கண்டறிய புதிய நோட்டுகளில் சிப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
உன்மை: கற்பனை கட்டுக்கதையாகும், இது போன்ற சிப்புகள் ஏதும் புதிய நோட்டுகளில் பொருத்தப்படவில்லை.
வண்ணம் குறையும்
வதந்தி: புதிய ரூபாய் நோட்டுகளின் நிறம் நாளுக்கு நாள் குறையும்.
உன்மை: ரூபாய் நோட்டுகள் இண்டாக்லியோ பிரிண்டிங் என்ற பாதுகாப்பான முறையில் அச்சிடப்பட்டுள்ளது. டர்போ எலக்ட்ரிக் விளைவினால் முதல் முறை ஒரு துணியில் படும் போது நிறம் அதனுடன் ஒட்டிக்கொள்ளும்.
வங்கி லாக்கரகளில் உள்ள நகைகள் முடக்கப்படும்
இது ஆதாரம் அற்றது. வங்கி லாக்கர்கள் மற்றும் அதில் உள்ள நகைகளை முடக்கக்கூடிய அளவிற்கு எந்தத் திட்டமும் இதில் இல்லை.


Click it and Unblock the Notifications