ஐடி மற்றும் இஞ்சினியரிங் துறைகளில் உள்ள வேலைவாய்ப்பு, அதன் சம்பளம், வளர்ச்சியை வைத்து வெளியிடப்பட்டு இருந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த வேலை வாய்ப்பு இணையதள நிறுவனமான காரியர்காஸ்ட் 10 சிறந்த ஐடி மற்றும் இஞ்சினியரிங் வேலை வாய்ப்புகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியல் ஐடி மற்றும் இஞ்சினியரிங் துறைகளில் உள்ள வேலைவாய்ப்பு, அதன் சம்பளம், வளர்ச்சியை வைத்து வெளியிடப்பட்டு இருந்தது.
நாங்கள் உங்களுக்காக அந்தப் பட்டியலில் இருந்து ஆறு சிறந்த ஐடி வேலை வாய்ப்புகளை மட்டும் இங்குத் தொகுத்து வழங்கி உள்ளோம்.
டேட்டா சைண்டிஸ்ட்
காரியர்காஸ்ட் வெளியிட்ட பட்டியலில் இது தான் முதன்மையான வேலை வாய்ப்பாகும். இந்தப் பதவியில் பணி புரிவோர் 2024 ஆம் ஆண்டு 16 சதவீத வளர்ச்சியைப் பெறுவர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பதவிக்கு நிதி, வர்த்தகம், கல்வி, ஹெல்த்கேர் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
டேட்டா சைண்டிஸ்ட் பணியில் உள்ளவர்கள் 128,240 டாலர்கள் வரை சம்பளம் பெறுகின்றனர்.
தகவல் பாதுகாப்பு ஆய்வாளர்
பட்டியலில் உள்ள வேலை வாய்ப்பில் சிறந்த வேலை வாய்ப்பு என்றால் அது தகவல் பாதுகாப்பு ஆய்வாளர் பதவியே ஆகும்.
இந்தப் பதவியில் பணிபுரிபவர்களுக்கு வருங்காலத்தில் 18 சதவீத வளர்ச்சி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இப்பதவியில் வேலை செய்பவர்களுக்கு வருடத்திற்கு 90.10 டாலர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கணினி அமைப்புகள் ஆய்வாளர்
நான்காவது முதன்மையான வேலை வாய்ப்பு என்றால் அது கணினி சிஸ்டம் அனலிஸ்ட் ஆகும். இந்தப் பதவியில் வேலை செய்பவர்கள் 85,800 டாலர் வரை சம்பளமாக பெறுவர். அது மட்டும் இல்லாமல் 21 சதவீதம் வரை வேலையில் வளர்ச்சி உண்டு என்று கூறப்படுகிறது.
மென்பொருள் பொறியாளர்
ஐடி துறையில் மூன்றாவது சிறந்த வேலை வாய்ப்பு என்றால் அது மென்பொருள் பொறியாளர் பணியாகும். இத்துறையில் பணிபுரிபவர்கள் 100,690 டாலர்களாகச் சம்பளமாகவும், வேலைவாய்ப்பில் 17 சதவீதம் வரை வளர்ச்சியையும் பெறுவர்.
நெட்வொர்க் மற்றும் கணினி அமைப்பின் நிர்வாகி
2016 ஆம் ஆண்டின் சிறந்த ஐடி பணியாளர்கள் வேலை வாய்ப்பில் நெட்வொர்க் மற்றும் கணினி அமைப்பின் நிர்வாகியும் ஒன்றாக உள்ளது. இந்தத் துறையில் பணிபுரிபவர்களுக்கு 8 சதவீதம் வளர்ச்சியும், வருடத்திற்கு 77,180 டாலரும் சம்பளமாக பெறுகின்றனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதள வடிவமைப்பாளர்
ஐடி துறையில் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்தப் பணியில் வேலை செய்பவர்களுக்கு துவக்கத்தில் குறைந்த அளவே சம்பளம் இருந்தாலும் இன்னும் சில வருடங்களில் இத்துறை 27 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது. மேலும் இத்துறையில் பணி புரிபவர்கள் ஆண்டுக்கு64,970 டாலர்கள் வரை சம்பளமாக பெறுகின்றனர்.


Click it and Unblock the Notifications