இவர்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு கோடிகள் செலவு செய்தும் 500 மற்றும் 1000 ரூபாய் பிரச்சனை இல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்கள் அனைவரும் 100 ரூபாய் மற்று 1000 ரூபாயினை மாற்ற வங்கிகளில் வரிசையில் நிற்கும் போது இவர்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு கோடிகள் செலவு செய்தும் 500 மற்றும் 1000 ரூபாய் பிரச்சனை இல்லாமல் செய்துள்ளனர்.

 

வீடு, விசயநகர அரண்மனை, திருப்பதி கோவில் என செட்டு போட்டு நடத்திய திருமணத்திற்கு இவர்கள் செய்துள்ள செலவுகளை இங்குப் பார்ப்போம்.

150 கோடியில் நகைகள்

150 கோடியில் நகைகள்

ஜனார்தன் ரெட்டியின் மகள் பிராமணி அணிந்துள்ள வைரக் கற்கள் பதிக்கப்பட்ட கழுத்தணியின் மதிப்பு மட்டுமே 25 கோடி ரூபாயாகும். பல்லாரியைச் சேர்ந்த நான்கு கடைகள் மற்றும் பெங்களூருவின் ஒரு கடையில் ரூ.15௦ கோடிக்கு பழமை வாய்ந்த நகைகள் வாங்கப்பட்டுள்ளன.

அவருக்காக வாங்கப்பட்டுள்ள ஒரு சேலை முழுவதும் தங்க இழைகளால் நெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து வாங்கப்பட்டுள்ள அதன் மதிப்பு மட்டும் ரூ.40 லட்சமாகும்.

அரங்க வடிவமைப்பு மட்டும் ரூ.25 கோடி

அரங்க வடிவமைப்பு மட்டும் ரூ.25 கோடி

ரொட்டியின் கிராமம் மற்றும் மணமகள், மணமகன் வீடு ஆகியவை விஜயநகர பேரரசு மற்றும் திருப்பதி கோவில் போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதற்கான செலவு மட்டும் ரூ.25 கோடி ஆகும் என்று வடிவமைப்பாளர்கள் கூறினார்கள்.

உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுதலுக்கு மட்டும் ரூ.6௦ கோடி.

ரெட்டி வீட்டுத் திருமணத்திற்கு 5௦,௦௦௦ விருந்தினர் வந்திருந்தனர். 16 வகையான இனிப்புகள் பரிமாறப்பட்டன. பந்தியில் பரிமாறப்பட்ட உணவு ஒருவருக்கு ரூ.3,௦௦௦ ஆனதாம்.

ஒப்பனைக் கலைஞர்களுக்கு மட்டும் ரூ.3௦ லட்சம்
 

ஒப்பனைக் கலைஞர்களுக்கு மட்டும் ரூ.3௦ லட்சம்

திருமணத்திற்காக பெங்களூருவிலிருந்து 5௦ ஒப்பனை கலைஞர்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் கூலி 5௦,௦௦௦. மணப்பெண்ணின் ஒப்பனை கலைஞர் மும்பையிலிருந்து பறந்து வந்து ரூ.6 லட்சம் பெற்று சென்றுள்ளார்.

நடனம் மற்றும் காமிராவுக்கு மட்டும் ரூ.2௦ லட்சம்

நடனம் மற்றும் காமிராவுக்கு மட்டும் ரூ.2௦ லட்சம்

தெலுங்கில் இசை மற்றும் நடனத்திற்காக மட்டும் ரூ.8 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 15 காமிரா மேன்களுக்கு ரூ.12 லட்சம் செலவிடபாடுள்ளது.

பாதுகாப்புக்காக மட்டும் ரூ.6௦ லட்சம் 5 நாட்களுக்கு 3,௦௦௦ மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்தனர். அவர்கள் வழக்கமாக ஐந்து மணி நேரத்திற்கு ரூ.2,௦௦௦ வாங்குவார்களாம். ஆனால் ரெட்டி 5 நாட்களுக்கு ரூ.12 லட்சம் கொடுத்துள்ளாராம்.

இந்த செலவுகள் மட்டுமே ரூ.235 கோடி ஆனதாம்

இந்த செலவுகள் மட்டுமே ரூ.235 கோடி ஆனதாம்

விருந்தினருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசு கணக்கு இதில் சேர்க்கப்படவில்லை. பான் வழங்க மாடல்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பிரேசில், ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளிருந்து நடன கலைஞர்கள் வரவழைக்கப்படிருன்தனர். திரைப்பட நடிகை தம்மன்னா மற்றும் பிற தென் இந்திய கலைஞர்களும் வந்திருந்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No cash crunch for Janardhan Reddy! See how much he spent on his daughter's wedding

No cash crunch for Janardhan Reddy! See how much he spent on his daughter's wedding
Story first published: Saturday, November 19, 2016, 17:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X