உலகளவில் 610,000 ஊழியர்களுக்கும் மேற்பட்டோர் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற வோல்க்ஸ்வேகன் கார் தயாரிப்பு நிறுவனம் வெள்ளிக்கிழமை 30,000 ஊழியர்களை வெளியேற்ற இருப்பதாகவும் அதற்குக் காரணமாக சுற்றுச்சுழலை மாசு படுத்தக்கூடிய ஊழலினால் ஏற்பட்ட இழப்பை குறைத்து லாபத்தை அதிகரிக்கவே என்று கூறப்படுகிறது.

இந்த ஊழியர் குறைப்பு மொத்தமாக ஜெர்மனியில் உள்ள தங்களது தொழிற்சாலையில் இருந்து மட்டும் தான் என்று சிஎன்என் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகளவில் 610,000 ஊழியர்களுக்கும் மேற்பட்டோர் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
ஊழியர் குறைப்பில் 23,000 பேர் உள்நாட்டுச் சந்தையில் மட்டுமே ஆகும். இந்த முடிவுக்கு ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்றும் ஊழியர்கள் தன்னார்வத்துடன் வெளியேறுபவரை வரவேற்கின்றனர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய கார்களை தயாரித்துச் சிக்கலில் மாற்றிய காரணத்தினால் 10 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அபராதமாகச் செலுத்தும் நிலைக்கு வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications