புதிய திட்டத்தின் மூலம் தங்களது மாநிலத்தில் பணம் என்ற ஒன்று இல்லாமல் பரிவர்த்தனை செய்யலாம் என்பதை நிரூபித்து உள்ளார்கள்.
புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து பணம் மற்றும் சில்லைரை பிரச்சனைகளில் இந்தியாவே சிக்கி தவிக்கும் நிலையில் தெலுங்கானாவும், ஆந்திராவும் புதிய முயற்சியை எடுத்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் தங்களது மாநிலத்தில் பணம் என்ற ஒன்று இல்லாமல் பரிவர்த்தனை செய்யலாம் என்பதை நிரூபித்து உள்ளார்கள்.
மக்கள் அவதி
ரூபாய் நோட்டு பிரச்சனை கருப்புப் பணம் வைத்துள்ளவர்களுக்குப் பிரச்சனை என்றால் சாதரான மக்களே தங்கலது அன்றாட பணிகளை கூடச் செய்ய இயலாமல் பெறும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற சிக்கலான நிலையில் இந்த இரண்டு மாநில அரசுகள் என்ன செய்துள்ளன தெரியுமா உங்களுக்கு.
மைக்ரோ ஏடிஎம்
தொழில் மேம்பாட்டு நிதி நிறுவனம் (IDFC) உடன் கூட்டு சேர்ந்து ஆதார் அட்டை உதவியுடன் மைக்ரோ ஏடிஎம் சேவையை குகத்பல்லி ராயடு பஜாரில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இங்கு வழங்கப்படும் டோக்கன்களை பயன்படுத்தி பணம் இல்லாமலேயே காய்கறி வாங்கலாம்.
பணம் இல்லாமல் காய்கறி
ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ளவர்கள் இங்கு உள்ள ஐடிஎப்சி கவுண்டருக்குச் சென்று தங்களது கணக்கு விவரங்கள் மற்றும் கைரேகையை பதிவுசெய்வதன் மூலம் 5, 10 மற்றும் 20 ரூபாய் டோக்கன்களைப் பெறலாம்.
நுகர்வோர் 15,000 ரூபாய் வரை இது போன்று பணம் இல்லாமல் காய்கறி வங்கி பயன்பெற இயலும்.
பணம் இல்லா பரிவத்தனை
இங்குப் பெறும் டோக்கன்களை பயன்படுத்தி பொருட்களை வாங்கிய பிறகு உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் தானாகவே எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த டோக்கன்களை பெற்ற வணிகர்கள், விவசாயிகள் இதனை மைக்ரோ ஏடிஎம் சேவை மையத்தில் சமர்ப்பித்து இதற்கான பணத்தை தங்களது வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளலாம்.
வங்கி கணக்கு இல்லாதவர்கள்
வங்கி கணக்கு இல்லாதவர்கள் ஐடிஎப்சி பிரதிநிதிகள் உதவியுடன் புதிய வங்கி கணக்கை அந்த இடத்திலேயே உருவாக்கலாம்.
வரவேற்கும் பிற வங்கிகள்
தொழில் மேம்பாட்டு நிதி நிறுவனம் (IDFC) செய்துள்ள இந்த புதிய முயற்சியை ஆந்திர எஸ்பிஐ வங்கியும் சாதாரண பொது மக்களுக்கு வழங்க இருக்கிறது. இதன் மூலம் பணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்யலாம்.
இதைப் பிற மாநிலங்களும் மத்திய அரசும் பின்பற்றினால் மக்களின் அன்றாட பிரச்சனைகளில் இருந்து சிறிது விடிவு காலம் பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications