புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ஹெலிக்காப்டரில் டெலிவரி.. மத்திய அரசு அசத்தல்..!

மக்கள் மத்தியில் நிலவும் பணத் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு ஹெலிக்காப்டர், ராணுவ விமானங்கள் மூலம் பணத்தை டெலிவரி செய்கிறதாம்.

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை அறிவிப்புக்குப் பின் பணத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சந்தையில் நிலவும் பணதட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு புதிதாக 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இதனை வங்கிகளுக்குத் துரித நேரத்தில் விநியோகம் செய்யும் பொருட்டு மத்திய அரசு தற்போது ஹெலிக்காப்டர் மூலம் பணத்தை டெலிவரி செய்து வருகிறது.

21இல் இருந்து 6 நாள்

21இல் இருந்து 6 நாள்

மோடியின் அறிவிப்பு வெளியான முன்பு வரை இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப்படும் இடத்தில் இருந்து வங்கிகளுக்குப் பணத்தைப் பிரித்துக் கொடுக்கப்படும் டிஸ்ட்ரிபியூஷன் சென்டருக்குப் பணத்தைக் கொண்டு வர 21 நாட்கள் தேவைப்படும்.

ஆனால் இப்போது 6 நாட்களுக்குள் கொண்டு வரப்படுகிறது.

 

ராணுவம் விமானம் முதல் ஹெலிக்காப்டர் வரை

ராணுவம் விமானம் முதல் ஹெலிக்காப்டர் வரை

வங்கிகளில் தற்போது பணத் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பணத் தேவையைக் குறைக்க மத்திய அரசு தற்போது அனைத்து விதமான போக்குவரத்துகளையும் பயன்படுத்தி வருகிறது.

21 நாட்களில் செய்யப்படும் டெலிவரி தற்போது ராணுவம் விமானம் மற்றும் ஹெலிக்காப்டர் மூலம் வெறும் 6 நாட்களில் சேர்க்கப்படுகிறது.

 

மேம்பாடு

மேம்பாடு

அடுத்த வரத்திற்குள் 6 நாட்கள் என்பது மேலும் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளது. தற்போது செயல்படுத்தி வரும் பணிகள் மூலம் இந்தியாவில் பெரு நகரங்களில் பணத் தட்டுப்பாடு அதிகளவில் குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போது மத்திய அரசு கிராமம் மற்றும் சிறு நகரங்களுக்கு அதிகளவிலான பணத்தைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

 

ஜனவரி 15

ஜனவரி 15

500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை அறிவிப்புக்குப் பின் இந்தியாவில் பல வழிகளில் பொருளாதாரமும், வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி 15ஆம் தேதிக்குப் பின் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பும்.

மேலும் இக்காலகட்டத்தில் வங்கிகளில் குவிந்துள்ள வைப்பு நிதிகள் மூலம் மத்திய அரசு பல நன்மைகளை அடைய உள்ளது. குறிப்பாக வரி வருமானம்.

 

வளர்ச்சிக்கான வாய்ப்புகள்

வளர்ச்சிக்கான வாய்ப்புகள்

மத்திய அரசு இதனைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வங்கிகளில் அதிகப்படியான நிதியை உட்செலுத்த முடியும், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும், நாட்டின் பாதுகாப்பை பன்மடங்கு உயர்த்தும் வகையில் அதிநவீன ஆயுதங்களை வாங்க முடியும்.

வங்கிகள் வலிமை அடையும்

வங்கிகள் வலிமை அடையும்

மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் வங்கிகளில் செயற்படா சொத்துக்கள், வராக் கடன்கள் என அனைத்தும் குறையும். இதனால் வங்கிகளின் நிதி நிலைகள் வலிமை அடையும்.

இதன் எதிரொலியாக அதிக வட்டி வருமானம் அளிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

 

வரலாறு

வரலாறு

மத்திய அரசு இதேபோன்ற நடவடிக்கையை 1978ஆம் ஆண்டுச் செய்தது ஆனால் அப்போது 20 சதவீத ரூபாய் நோட்களைக் கருப்புப் பண முதலைகள் அரசிடம் சமர்ப்பிக்கவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+