ஸ்பைஸ்ஜெட்டில் மட்டும் இல்லை இண்டிகோ விமானத்திலும் 737 ரூபாய்க்கு பயணம் செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சலுகை விலை கட்டணமாக 737 விமான டிக்கெட் விலையை அறிவித்ததை அடுத்து இண்டிகோ நிறுவனமும் அதே விலை, அதே நாட்கள் என போட்டியாக கட்டணத்தை அறிவித்துள்ளது.

 

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் திங்கட்கிழமை 737 ரூபாய்க்கு உள்நாட்டு விமான கட்டணங்களை குறைத்து 4 நட்கள் விற்பனையாக அறிவித்தது. இந்த ஆஃபருக்கு ஸ்பைசி வருடாந்திர விற்பனை என்றும் 2016 நவம்பர் 24 ஆம் தேதி நள்ளிரவு வரை புக் செய்யலாம் என்று அறிவித்திருந்தது.

ஒரே ஆஃபர் இரண்டு விமான சேவையில்

ஒரே ஆஃபர் இரண்டு விமான சேவையில்

இதே ஆஃபர் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையிலும் 2016 நவம்பர் 24 ஆம் தேதி நள்ளிரவு வரை வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு விமான சேவையின் சலுகை கட்டண டிக்கெட்களில் 2017 ஜனவர் 9 முதல் 2017 அக்டோபர் 28 ஆம் தேதி வரை புக் செய்து பயணம் செய்யலாம்.

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 737 ரூபாய்க்கு சென்னை - கோயம்புத்தூர் - சென்னை, ஜம்மு- ஸ்ரீநகர் - ஜம்மு, சண்டிகர் - ஸ்ரீநகர் - சண்டிகர், அகர்தலா - கவுகாத்தி என 500 கிலோமீட்டர் வழித்தடங்களில் சலுகையை அறிவித்தது.

இண்டிகோ
 

இண்டிகோ

இதே போன்று இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தில் பார்த்த போது உதாரனத்திற்கு சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல 737 ரூபாய் என டிக்கெட் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எத்தனை சீட்டு

எத்தனை சீட்டு

ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ இரண்டு நிறுவனங்களும் எத்தனை சீட்டுகளை இந்த சலுகை கட்டணத்தில் புக் செய்யலாம் என்று எந்த தகவலையும் அளிக்கவில்லை.

ஏர் ஏசியா

ஏர் ஏசியா

2017 ஏப்ரல் வரை பயணம் செய்வதற்கான விமான டிக்கெட்களை நவம்பர் 27 ஆம் தேதி வரை 899 ரூபாய்க்கு புக் செய்யலாம் என்று ஏர் ஏசியா நிறுவனமும் அறிவித்துள்ளது.

இப்படி விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அளிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை கண்டது. இப்போது புதிய நோட்டுகள் அறிவித்ததில் இருந்து டிக்கெட் புக் செய்வது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மோடி, ஓபாமா போன்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After SpiceJet's Rs. 737 Offer, Another Airline Sells Tickets At Same Price

After SpiceJet's Rs. 737 Offer, Another Airline Sells Tickets At Same Price
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X