நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் இருக்கும் 3,70,000 ஊழியர்களின் ஊதிய உயர்வு முறையை மாற்றி அமைக்கத் திட்டமிட்டு வருகிறது டிசிஎஸ்.
இந்திய சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் தனது ஊதிய உயர்வு ஆய்வு முறையை மாற்றி வரும் நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனம் இந்தப் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் மூலம் இனி ஐடி பிரிவிற்கும், பிபிஓ பிரிவிற்கும் தனித்தனி ஊதிய உயர்வு ஆய்வு முறையை அமைக்க உள்ளது டிசிஎஸ்.

இந்தப் புதிய ஊதிய உயர்வு ஆய்வு முறையில் டிரைனீ ஊழியர்கள் முதல், உயர் அதிகாரிகள் வரை அனைத்துத் தரப்பினரும் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைத் துல்லியமாக்க கணிக்கும் வகையில் இதனைக் கட்டமைக்கப்பட உள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கேபிஎம்ஜி, மைக்ரோசாப்ட், அக்சென்சூர், டெலாயிட், இந்தியாவில் டெக் மஹிந்திரா ஆகியவை 'பெல் கர்வ்' முறையிலான ஆய்வு முறையை நீக்கிப் பல வருடங்கள் ஆன நிலையில் இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் போன்ற நிறுவனங்களும் இதற்கான பணிகளில் இறங்கிப் பல மாதங்கள் ஆகியது.
ஆனால் இந்தியா சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் இப்போது தான் இதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் இந்தப் புதிய முறையை எப்படி வடிவமைக்கப் போகிறதோ என்ற குழப்பத்தில் 3,70,000 ஊழியர்களின் தற்போது உள்ளது.


Click it and Unblock the Notifications