நாட்டின் முன்னணி ரேடியோ சேனல்களில் ஒன்றான பிக் FM வர்த்தகத்தை விற்பனை செய்கிறார் அதன் உரிமையாளர் அனில் அம்பானி. என்ன விஷயம்.?
ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நெர்வொர்க் நிறுவனத்தின் கீழ் இருக்கும் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு வர்த்தகத்தை ஜீ குரூப் நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார் இக்குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி.
அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் கேபிடல்
ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நெர்வொர்க் நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான ரிலையன்ஸ் கேபிடல் தனது ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு பிரிவின் 49 சதவீத பங்குகளை ஜீ மீடியா கார்ப் நிறுவனத்திடம் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
1,900 கோடி ரூபாய்
ஜீ மீடியா கார்ப் கைப்பற்றும் இந்த 49 சதவீத பங்குகளின் மதிப்பு 1,900 கோடி ரூபாய் ஆகும்.
ஜீ மீடியா கார்ப்
இதேநேரத்தில் ஜீ குழுமத்தின் தனிப்பிரிவான ஜீ எண்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் இக்குழுமத்தின் 100 சதவீத டிவி வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பங்கு விற்பனை மற்றும் கைப்பற்றுதல் குறித்து ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ஜீ குரூப் ஆகிய நிறுவனங்கள் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பணம்..
ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நெர்வொர்க்-இன் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாகக் கிடைக்கும் தொகையை அதன் ஹோல்டிங் நிறுவனமான ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் கடனை அதிகளவில் குறைக்க வழி செய்யும் என அனில் அம்பானி கூறியுள்ளார்.
சிறப்புத் தேவை அமைப்பு
இந்த ஒப்பந்தத்தின் படி ரிலையன்ஸ் கேபிடல் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் 45 செயல்பாடுகள், 14 புதிய ரேடியோ சேனல்களை 2 சிறப்புத் தேவை அமைப்பில் இணைக்கப்பட உள்ளது.
இந்த இரு சிறப்புத் தேவை அமைப்பில் ஜீ மீடியா கார்ப் நிறுவனம் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்ற உள்ளது.
ரிலையன்ஸ் குழுமம்
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் தனது ரேடியோ வர்த்தகத்தைப் பிர் எப்எம் பெயரிலும், ஒளிபரப்பு வர்த்தகத்தைப் பிக் மேஜிக் என் ஹிந்தி சேனல் மற்றும் பிக் கங்கா என்ற போஜ்பூரி சேனல்களையும் நடத்தி வருகிறது.
இந்தப் புதிய ஒப்பந்தத்தின் படி இதன் வர்த்தகங்கள் அனைத்தும் 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications