425 கோடி ரூபாய்க்கு குமார மங்கலம் பிர்லா வாங்கிய 30,000 சதுர அடி உள்ள இரண்டு அடுக்கு பங்களா பற்றி தெரியுமா உங்களுக்கு..?
மும்பை: சென்ற நிதி ஆண்டின் அதிக விலை மதிப்பு உள்ள ஒரு ஒப்பந்தமாகக் 425 கோடி ரூபாய்க்கு குமார மங்கலம் பிர்லா வாங்கிய 30,000 சதுர அடி உள்ள இரண்டு அடுக்கு பங்களா என்றும் கூறலாம்.

மும்பையில், மலபார் மலையில், லிட்டில் கிப்ஸ் ரோட்டில் உள்ள ஜாடியா வீட்டினை ஒய் ஜாடியவிடம் இருந்து கைப்பற்றினார் பிர்லா. 1970களில் எம்.சி.வகீல் என்பவரிடம் இருந்து ஜாடியா இந்த வீட்டை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பிராப்கைடு நிறுவனம் இந்தப் பிரபல பங்களாவைப் பற்றி வெளியிட்ட சுவாரசியமான உன்மைகளை இங்குப் பார்ப்போம்.
மனையின் அளவு
31,495 சதுர அடி உள்ள இந்த இடத்தின் அளவில் 25,000 சதுர அடியில் வீடு கட்டப்பட்டுள்ளது.
பழுப்பு நிறம் பூசப்பட்டுள்ள இந்த வீட்டின் வெளிப்புறத்தில் நின்று பார்த்தால் தங்கு தடையின்றி கடல் காட்சி அளிக்கும்.
அறைகள்
இந்தப் பங்களாவில் 20 படுக்கை அறைகள் மற்றும் பர்மா தேக்கினால் கட்டமைக்கப்பட்ட நடன அரங்கும் உள்ளது.
கடலும் தோட்டமும்
இங்கு விசாலமான தாழ்வாரம் கடலுடன் ஒட்டிய தோட்டங்களுடன் உள்ளது.
திறந்தவெளி அறை
பங்களாவின் உள்ளே சீலிங் இல்லா திறந்தவெளி அறைகள் உள்ளன, இங்கு அமர்ந்து கொண்டு வாணத்தைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியை அளிக்கிறது.
இந்தக் குடியிருப்பில் ஆடம்பரமான தோட்டம், குளம், மற்றும் வீட்டில் மத்தியில் திறந்தவெளி அறை போன்றவை உள்ளன.


Click it and Unblock the Notifications