பணச் சலவையில் ஈடுபட்ட ஆக்சிஸ் வங்கியின் 2 வங்கி மேலாளர்கள் கைது..!

ஹாட் நியூஸை ஷாட்டா படிக்க: ஸ்பீக்கர் பாக்ஸ்

4 வருடத்தில் ரூ15 கோடி கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ளது.. ஆர்பிஐ ரிப்போர்ட்..!

4 வருடத்தில் ரூ15 கோடி கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ளது.. ஆர்பிஐ ரிப்போர்ட்..!

கடந்த 3.5 ஆண்டுகளில் வங்கி மற்றும் ஏடிஎம் வாயிலாக இந்தியாவில் சுமார் 19 லட்ச ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளது என ரிசர்வ் வங்கியின் ஆய்வு கூறுகிறது. இந்த 19 லட்ச ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 14.97 கோடி ரூபாயாகும்.

தற்போது மோடி அறிவித்துள்ள 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடையின் மூலம் இதில் பெருமளவிலான தொகை தற்போது முடக்கப்பட்டுள்ளது.
#RBI #Bank #CounterfeitNotes

 

எல்ஐசி பிரீமியம் செலுத்த 30 நாள் கூடுதல் அவகாசம்..!

எல்ஐசி பிரீமியம் செலுத்த 30 நாள் கூடுதல் அவகாசம்..!

இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை மற்றும் 2000 ரூபாய் அறிமுகம், அதிகளவினால் பணி பரிமாற்றம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்நிலையில் மத்திய அரசு அறிவிப்புகள் படி தற்போது வாரத்திற்கு 24,000 ரூபாய் வரை மட்டுமே ஏடிஎம்களில் எடுக்க முடியும்.

இதனால் மக்கள் மத்தியில் எப்போதும் இல்லாத வகையில் பணத்தட்டுப்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு எல்ஐசி நிறுவனம் நவம்பர் 8 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் பிரீமியம் செல்லுத்த வேண்டிய காப்பீட்டாளர்களுக்கு கூடுதலாக 30 நாள்கள் கால அவகாசம் அளித்துள்ளது.
#LIC

 

பணச் சலவையில் ஈடுபட்ட ஆக்சிஸ் வங்கியின் 2 வங்கி மேலாளர்கள் கைது..!

பணச் சலவையில் ஈடுபட்ட ஆக்சிஸ் வங்கியின் 2 வங்கி மேலாளர்கள் கைது..!

மக்கள் பணத்திற்காக வங்கி வாசலில் காத்திக்கிடக்கும் நிலையில் ஆக்சிஸ் வங்கியின் டெல்லி கஷ்மீரி கேட் கிளையின் 2 வங்கி மேலாளர்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவி செய்துள்ளது வருமான வரித்துறையினரின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பின் இவ்விரு வங்கி மேலாளர்களின் வீடு மற்றும் பணியிடங்களை வருமான வரித்துறையின் சோதனை செய்தபோது சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்கள் சிக்கியது.

மேலும் பணச் சலவையில் ஈடுபட்ட குற்றத்தையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
#AxisBank

 

ஸ்மார்ட்போன் விற்பனை சரிந்தாலும் பாதிப்பில்லை சியோமி..!

ஸ்மார்ட்போன் விற்பனை சரிந்தாலும் பாதிப்பில்லை சியோமி..!

2015ஆம் நிதியாண்டில் சீன நாட்டில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை சுமார் 45 சதவீதம் வரை சரிந்துள்ளது. ஆனால் இதைப்பற்றித் துளியும் கவலைப்படவில்லை சியோமி. காரணம் இக்காலகட்டத்தில் தனது ஸ்மார்ட்ஹோம் பொருட்கள் அதிகளவிலான விற்பனை மற்றும் வருவாய் அளித்ததாகக் குறிப்பிடுகிறது சியோமி.

2014ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 46 பில்லியன் டாலர்.
#Xiaomi #SmartPhone

 

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைக்க ரிசர்வ் வங்கி சேமிப்புக் கிடங்கை திறந்துள்ளது..!

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைக்க ரிசர்வ் வங்கி சேமிப்புக் கிடங்கை திறந்துள்ளது..!

இனி இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் சொல்லாது என்ற மோடியின் அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பணம் மாற்றம் மற்றும் சேமிப்புக் கணக்குகளில் வைப்பாகவும் செலுத்தி வருகின்றனர். இதற்காகப் பல மணிநேரம் காத்துக்கிடந்தது வேறு கதை.

ஆனால் இப்போது வங்கிகளில் மலையாய் குவிந்துக்கிடக்கும் ரூபாய் நோட்டகளைப் பாதுகாப்பாக வைக்கப் போதிய இடம் இல்லாத காரணத்தால் ரிசர்வ் வங்கி மாநில அளவிலான சேமிப்பு கிடங்குகளை உருவாக்கியுள்ளது. இதில் வங்கிகள் தங்களிடம் இருக்கும் பணத்தைச் சேமித்து வைக்க முடியும்.

இந்தச் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படும் பணத்திற்கு ஈடான தொகையை ரிசர்வ் வங்கி, வணிக வங்கியின் நடப்புக் கணக்கில் வைப்பு வைத்துவிடும்.
#RBI

 

16 நாட்களாகத் தொடர்ந்து நகை கடைகள் மூடல்.. டெல்லி வியாபாரிகள் தவிப்பு..!

16 நாட்களாகத் தொடர்ந்து நகை கடைகள் மூடல்.. டெல்லி வியாபாரிகள் தவிப்பு..!

நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை அறிவிப்பு வெளியான முதல் டெல்லியின் பல பகுதிகளில் இருக்கும் நகை கடைகள் சந்தை விலைக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்தது. இதனையடுத்துச் செய்யப்பட்ட சோதனையில் இது உறுதியான நிலையில் சனிக்கிழமை வரை கடந்த 16 நாட்களாக நகை கடைகள் மூடப்பட்டுள்ளது.

இதன் மூலம் டெல்லி என்சிஆர், தாரிமா கலான், சாந்தினி சாவ்க் மற்றும் காரோல் பாக் ஆகிய பகுதிகளில் தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது.
#Delhi #NCR #Jewellery #Gold

 

கார்ப்பரேட் வரியை குறைக்க மத்திய அரசிடம் இந்தியா இன்க் வலியுறுத்தல்..!

கார்ப்பரேட் வரியை குறைக்க மத்திய அரசிடம் இந்தியா இன்க் வலியுறுத்தல்..!

இந்தியா இன்க் எனப்படும், இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம், நிறுவனங்கள் மீது விதக்கப்படும் கார்ப்பரேட் வரியைக் குறைக்க வலியுறுத்தியுள்ளது. இதனுடன் குறைந்தபட்ச மாற்று வரியான MAT வரியைக் குறைக்கவும் அல்லது முழுமையாக நீக்கவும், கட்டுமானம் மற்றும் பொதுச் சேவைத் துறையில் மக்களின் அதிக முதலீட்டு ஈர்க்க வழிவகைச் செய்ய வலியுறுத்தியுள்ளது.

மேலும் தனிநபருக்கான வருமான வரி வசூல் அளவை தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் வலியுறுத்தியுள்ளது இந்தியா இன்க்.

பிப்ரவரி மாதம் துவக்கத்திலேயே 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பணிகளை மத்திய அரசு துவங்கியுள்ளதால், துவக்கத்திலேயே தனது கோரிக்கைகளை இந்தியா இன்க் முன்வைத்துள்ளது.
#IndiaInc

 

சாம்சங் நிறுவனத்தில் பிளவு..!

சாம்சங் நிறுவனத்தில் பிளவு..!


மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் சந்தையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கச் சாம்சாங் நிறுவனம் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற அமெகிக்க முதலீட்டு நிறுவனமான ஏலாய்ட் மேனேஜ்மென்சட் நிறுவனத்தின் திட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது.

இத்திட்டத்தின் படி சாம்சங் ஹோல்டிங் நிறுவனம் உரிமை நிறுவனம், செயல்பாட்டு நிறுவனம் என இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளது எனச் சியோல் எக்னாமிக் டெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
#Samsung

 

மருத்துவத் துறையில் சீர்திருத்தம் வேண்டும்.. டொனால்டு டிரம்பிடம் கோரிக்கை..!

மருத்துவத் துறையில் சீர்திருத்தம் வேண்டும்.. டொனால்டு டிரம்பிடம் கோரிக்கை..!

அமெரிக்காவில் மருத்து சேவை செய்யும் மருத்துவர்களின் அமைப்பான AAPI அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்டு டிரம்பிடம் அமெரிக்க மருத்து சேவை மற்றும் துறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதில் முக்கியமாக நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அதிகளவிலான சோதனைகள் செய்யப்படுவது கூடுதல் செலவுகளை ஏற்படுத்துவதாகவும் அவற்றை முறையாகக் குறைக்கச் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
#USA #AAPI #Doctor #Trump

 

புதிய விரிவாக்கத் திட்டங்களுடன் ஏர் இந்தியா

புதிய விரிவாக்கத் திட்டங்களுடன் ஏர் இந்தியா

பல வருடங்களுக்குப் பின் லாபத்தைச் சந்தித்துள்ள ஏர் இந்தியா, புதிய வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தைப் பெறுவதற்காக 6 புதிய வழித்தடங்களில் பயணிகள் விமானச் சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் பகுதியாக டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் பகுதிக்கு நேரடி விமானச் சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

மீதுமுள்ள திட்டங்கள் அனைத்தும் 2017ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என ஏர்இந்தியா தலைவர் அஷ்வானி லோகானி தெரிவித்தார். இத்திட்டங்களைக் கிரேட் எக்ஸ்பேன்ஷன் பிளான்ஸ் பார் ஏர் இந்திய என்ற பெயரில் செயல்படுத்த உள்ளது ஏர் இந்தியா.
#AirIndia

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+