போட்டியில் முகேஷ் அம்பானியின் ஜியோ இல்லாத காரணத்தால் ஏர்டெல் முதலிடமாம்.?
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான 'ஏர்டெல்' ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இத்துறை சார்ந்த நிறுவனங்களின் மொத்த சந்தை வருவாயில் 33 சதவீத வருமானத்தைத் தன்னகத்தில் வைத்துக்கொண்டு இந்திய சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால் இது அனைத்தும் ஜியோ வருமானத்திற்கு முந்தைய கதை..! எப்படி..?
ஏர்டெல்
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்திய டெலிகாம் துறையைச் சார்ந்த அனைத்து நிறுவனங்களின் வருவாய் அளவுகளைக் கணக்கிட்டபோது சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் நிறுவனம் சந்தை வருமான பங்கீட்டில் சுமார் 33 சதவீதத்தைப் பெற்றது மட்டும் அல்லாமல் 7 வருட உச்சத்தை எட்டியுள்ளது.
இதனால் இந்திய டெலிகாம் துறையிலேயே அதிக வருமானம் பெறும் நிறுவனமாக மட்டும் அல்லாமல், சந்தையில் புதிய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது ஏர்டெல். அப்போ ஜியோ..?
செப்டம்பரில் அறிமுகம்
இந்தியா மட்டுமல்லாமல் உலகத் தொலைத்தொடர்பு சேவைச் சந்தையில் புதிய புரட்சியைச் செய்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 'ஜியோ', தனது சேவைகளைச் செப்டம்பர் 5ஆம் தேதி மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தாலும் அவை அனைத்தும் இலவச சேவைகள்.
இதனால் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வருமானம் பெறு நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாகத் தான் ஏர்டெல் 7 வருட உச்சத்தை அடைந்துள்ளது.
போட்டி
இப்பட்டியலில் ஜியோ நிறுவனத்தை நீக்கவிட்டாலும், 33 சதவீதம் பெறும் அளவிற்கு ஏர்டெல் இக்காலகட்டத்தில் செய்த பணிகள் தான் 7 வருட உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
இந்திய சந்தையில் டெலிகாம் சேவை அளிக்கும் வோடபோன், ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் இந்தியா முழுவதும் 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஜூலை- செப்டம்பர் காலகட்டத்தில் சேவைகளின் பயன்பாடு அதிகரித்துக் காணப்பட்டது.
இதன் வாயிலாகவே 33 சதவீத வருவாயைப் பெற்றுள்ளது ஏர்டெல்.
டாப் 3 நிறுவனங்கள்
சந்தை வருமான பங்கீட்டுப் பட்டியலில் ஏர்டெல் 33 சதவீதம் (20 புள்ளிகள் உயர்வு), வோடபோன் இந்தியா 23.5 சதவீதம் (10 புள்ளிகள் உயர்வு), 3வது இடத்தில் ஐடியா செல்லுலார் 18.8 சதவீதம் (50 புள்ளிகள் சரிவு) பெற்றுள்ளது.
டேட்டா சேவை
தற்போதைய நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் மிகப்பெரிய வலிமை மற்றும் அதிக வருமான பெறும் பரிவு என்றால் டேட்டா சேவை தான். ஆனால் ஜியோவின் அறிமுகம் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று தெரிகிறது.
காரணம் இந்திய சந்தையில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்களின் சேவை கட்டணத்தை விட மிகவும் குறைவான கட்டணத்தில் சிறந்த சேவை அளிப்பதாக ஜியோ உறுதி செய்துள்ளது.
மொத்த வளர்ச்சி
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்திய டெலிகாம் நிறுவனங்களின் மொத்த வருமான வளர்ச்சி 2.40 சதவீதம் அதாவது 240 புள்ளிகள்.
மார்ச் காலாண்டு
இந்நிலையில் மார்ச் காலாண்டு முதல் ஜியோ நிறுவனம் வருமான பெறும் நிறுவனங்கள் பட்டியலில் முழுமையாக இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications