ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்குப் பார்ப்போம்.
இந்திய ரயில்வேயின் அடுத்த துணிகர முயற்சி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் மாதம் முதல் டெல்லி கொரக்பூர் வழித்தடத்தில் இயங்க இருக்கிறது.
இந்த ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்குப் பார்ப்போம்.
அட்டவணை படி ஆனந்த் விஹார் கொரக்பூர் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படும். மொத்தம் 10 ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் டிசம்பர் மாதம் முதல் இயங்க இருக்கிறது. மொத்தம் 21 பெட்டிகள் அனைத்தும் 3 அடுக்கு ஏசி கோச்சுகளாக இருக்கும். புதிய பெட்டிகளாக மெருகூட்டப்பட்ட இந்தப் பெட்டிகள் அழகிற்காக உட்புறம் வெளிப்புறம் என வெவ்வேறு வண்ணங்களுடன் வினைல் ஷீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எல்லாப் பெட்டிகளின் கதவுகள் அருகேயும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட பயணிகள் விவர போர்டு பொருத்தப்பட்டு இருக்கும். ஹம்சபர் சேவையில் தீ மற்றும் ஸ்மோக் டிடக்ஷன் உட்படப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தியுள்ளனர். இந்த ரயிலில் உள்ள பெட்டிகள் ஊனமுற்றோர் முதல் அனைவருக்கும் ஏற்றவாரும், ஒன்றினைக்கப்பட திரைகள் மற்றும் பிற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கப் பையோ டாய்லெட்டுகள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
முழுவதும் 3 அடுக்கு ஏசி கோச்சுகள்
நவநாகரிகமான உள்புறம்
எல்ஈடி திரை போர்டு
பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
எல்லோருக்காமான வசதிகள்
நாற்றம் இல்லா பயணம்


Click it and Unblock the Notifications