மத்தளத்திற்கு இருபக்கம் தான் அடி என்றால், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு 360 கோணத்திலும் அடி..!
சென்னை: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அமேசான் நிறுவனத்துடனான போட்டியில் 2016ஆம் நிதியாண்டு காலத்தில் 2,300 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துத் துவண்டுபோன நிலையில், சர்வதேச மியூச்சவல் பண்ட் மேலாண்மை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் அறிவிப்பால் ஒட்டுமொத்த இந்திய ஈகாமர்ஸ் சந்தையே ஆட்டம் கண்டுள்ளது.
ஜூலை 2015ஆம் ஆண்டுப் பிளிப்கார்ட் நிறுவனம், தனது நிறுவனம் மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்காக முதலீட்டை ஈர்க்கத் திட்டமிட்டபோது, சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பு 15.2 பில்லியன் டாலர். ஆனால் கடந்த ஒரு வருடத்தில், இந்திய சந்தையில் அமேசான் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 4 முறை குறைக்கப்பட்டுத் தற்போது வெறும் 5.5 பில்லியன் டாலர் தான் இந்நிறுவனத்தின் மதிப்பாக மோர்கன் ஸ்டான்லி அறிவித்துள்ளது. இந்திய டெக்னாலஜி நிறுவனங்களின் ஆதிக்கம் இந்திய சந்தையில் அதிகரித்து வந்த நிலையில் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இத்தகைய நிறுவனங்களில் முதலீட்டை வாரி வழங்கியது. ஆனால் மேக்ரோ பொருளாதாரப் பிரச்சனை வெடித்த பின் இதன் நிலை முழுமையாக மாறி தற்போது போட்ட முதலீட்டை எடுத்தால் போதுமென நிற்கிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் மோர்கன் ஸ்டான்லி பல வழிகளில் சுமார் 1.5 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளது. 1.5 சதவீதம் என்றால் தற்போதைய நிலையில் 1,969 பங்குகள். இந்திய சந்தையில் பிளிப்கார்ட் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் குறைந்து நஷ்டத்தின் அளவு சுமார் 110 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பை 38 சதவீதம் குறைத்து ஒரு பங்கின் விலை 52.13 டாலராக அறிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு மோர்கன் ஸ்டான்லி, பிளிபகார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது இதன் மதிப்பு 87.9 டாலர், மார்ச் 2016இல் 84.29 டாலர். தற்போது இதன் மதிப்பை 38 சதவீதம் குறைத்து 52.13 டாலராக அறிவித்துள்ளது.
மதிப்பீடு குறைப்பு
முதலீடும்.. சந்தையும்..
மோர்கன் ஸ்டான்லி
38 சதவீதம் சரிவு..
பங்கு விலை மாற்றங்கள்
அமேசான் உடன் போட்டி..


Click it and Unblock the Notifications