இந்தியாவின் 9 மிகப்பெரிய டெக்னாலஜி பணக்காரர்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு..?

By Siva lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியல் ஒன்றைச் சமீபத்தில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வழக்கம் போல் இந்த ஆண்டும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

    மேலும் இம்முறை இந்தப் பட்டியலில் இந்திய டெக்னாலஜி அதிபர்களும் அதிகளவில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தக் கட்டுரையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் உள்ள 9 இந்திய டெக்னாலஜி தொழிலதிபர்கள் குறித்துப் பார்ப்போம்.

    அஜிம் பிரேம்ஜி

    சொத்து மதிப்பு: $15 பில்லியன்
    உலக பணக்காரர்கள் பட்டியலில் 55வது இடம்

    விப்ரோ நிறுவனத்தின் அதிபரும், இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான 'விப்ரோ' நிறுவனத்தின் நிறுவனர்தான் அஜிம் பிரேம்ஜி. இவரது நிறுவனம் தற்போது புகழ் பெற்று விளங்கும் ஸ்னாப்டீல், மிந்த்ரா, பாலிசிபஜார் மற்றும் சயானோகன் உள்படப் பல நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்துள்ளது.

     

    ஷிவ் நாடார்

    சொத்து மதிப்பு: $11.1 பில்லியன்
    உலக பணக்காரர்கள் பட்டியலில் 88வது இடம்

    இந்தப் பட்டியலில் உள்ள ஒரே தமிழர் என்ற புகழ்பெற்ற ஷிவ் நாடார் HCL நிறுவனத்தின் சேர்மன் ஆவார். இந்நிறுவனம் இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய சாப்ட்வேர் சேவையை செய்து வரும் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் ஷிவ் நாடார் அவர்கள் ஷிவ் நாடார் பவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி அதன்மூலம் பல உதவி செய்து வரும் வள்ளலாகவும் விளங்கி வருகிறார்.

     

    என்.ஆர்.நாராயண மூர்த்தி

    சொத்து மதிப்பு: $1.9 பில்லியன்
    உலக பணக்காரர்கள் பட்டியலில் 959 வது இடம்

    இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் சேவையை அளித்து வரும் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி. கடந்த 1981ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை இன்போசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆகவும், அதன் பின்னர் 2002 முதல் 2011 வரை இந்நிறுவனத்தின் சேர்மனாகவும் இருந்தவர். இவரது சொந்த நிறுவனமான 'கேட்டமரான் வெண்ட்சர்ஸ்' நிறுவனம் யேபி, ஹெக்டார் பேவரேஜஸ், இன்னொவோட்டி, கோவர்ஃபாக்ஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம் அமேசன் நிறுவனத்தின் இணை நிறுவனமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

     

    கிரிஸ் கோபாலகிருஷ்ணன்

    சொத்து மதிப்பு: $ 1.6 பில்லியன்
    உலக பணக்காரர்கள் பட்டியலில் 1121 வது இடம்

    கிரிஸ் கோபால கிருஷ்ணன் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கடந்த 2007 முதல் 2011 வரை இருந்தவர். பெங்களூரில் இயங்கி வரும் மூளை ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.225 கோடி தனது பங்களிப்பாகக் கொடுத்து ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவி வருபவர். மேலும் மனநல மருத்துவம் மற்றும் இரத்த சம்பந்த நோய்களுக்கான ஆராய்ச்சிகளுக்குப் பெருமளவில் பொருளாதார நிதியுதவி செய்து வருகிறார்.

     

    நந்தன் நிலிகானி

    சொத்து மதிப்பு: $ 1.6 பில்லியன்
    உலக பணக்காரர்கள் பட்டியலில் 1121 வது இடம்

    இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகக் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இருந்தவர் நந்தன் நிலிகானி. மேலும் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை UIAI -இன் சேர்மனாகவும் இருந்தவர். தற்போது அவர் EkStep என்ற நிறுவனத்தின் சேர்மனாக இருந்து வருகிறார். மேலும் டீம் இண்டஸ், ஃபோர்ட்டிகோ, மப்பிள், ஜுகர்னாட், லெட்ஸ் வெண்ட்சர், பவர்2SME மற்றும் சிஸ்டமாண்டிக்ஸ் ஆகிய நிறுவனங்களில் இவரது முதலீடுகள் உள்ளது.

     

    பின்னி பான்சால்

    சொத்து மதிப்பு: $1.2 பில்லியன்
    உலக பணக்காரர்கள் பட்டியலில் 1476 வது இடம்
    இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட்டின் இணை நிறுவனர் தான் பின்னி பான்சால். கடந்த ஜனவரி மாதம் வரை தலைமை நிர்வாகியாக இருந்த அதன் பின்னர் இந்த பொறுப்பை சச்சின் பன்சாலிடம் ஒப்படைத்துவிட்டு தற்போது இந்நிறுவனத்தை உலக அளவில் கொண்டு செல்வதிலும் தனது இ-காமர்ஸ் வியாபாரத்தை இன்னும் பிரமாண்டமாக விரிவுபடுத்தவும் முயற்சி செய்து வருகிறார்.

    சச்சின் பன்சால்

    சொத்து மதிப்பு: $1.2 பில்லியன்
    உலக பணக்காரர்கள் பட்டியலில் 1476 வது இடம்

    பின்னி பன்சால் கடந்த ஜனவரியில் விட்டு சென்ற பிளிப்கார்ட்டின் இணை நிறுவனர் பதவியை தற்போது வகித்து வருபவர் சச்சின் பன்சால். பின்னி பன்சாலுடன் இணைந்து ஏதர் எனர்ஜி, இன்ஷார்ட்ஸ், டிராக்ஸின், டைனி ஸ்டெப் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

     

    கே.தினேஷ்

    சொத்து மதிப்பு: $1.2 பில்லியன்
    உலக பணக்காரர்கள் பட்டியலில் 1476 வது இடம்

    இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான கே.தினேஷ் கடந்த 1981ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை போர்டு உறுப்பினராக இருந்தவர். இந்நிறுவனத்தின் தலைமை தரக்காப்பாளராக இருந்து 2011ல் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    எஸ்.டி.ஷிபுலால்

    சொத்து மதிப்பு: $1.1 பில்லியன்
    உலக பணக்காரர்கள் பட்டியலில் 1577 வது இடம்

    இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தவர் மட்டுமின்றி 2011 முதல் 2014 வரை தலைமை நிர்வாகியாகவும் இருந்தவர்.

     

    தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

    English summary

    Meet the 9 richest Indian tech billionaires

    Meet the 9 richest Indian tech billionaires
    Company Search
    Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
    Thousands of Goodreturn readers receive our evening newsletter.
    Have you subscribed?

    Find IFSC

    Get Latest News alerts from Tamil Goodreturns

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more