அரசு மற்றும் தனியார் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தினசரி பயன்படுத்தக்கூடிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்துத் துறைகளில் வர்த்தகமும் பாதிக்கப்படுட்டுள்ளன.
பணமில்லா நாடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக நவம்பர் 8 ஆம் தேதி மோடி திடீர் என்று பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை என தொலைக்காட்சியில் அறிவித்தார், இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரதமர் மோடி இந்த அறிவிப்பால் இந்தியாவின் ஜிடிபி சுமார் 6.1 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பழைய ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து 6 டிரில்லியன் ரூபாய் வரை பணத்தை வங்கி கணக்கில் மக்கள் டெப்பாசிட் செய்துள்ளனர்.
இப்படிப் பட்ட சூழலில் பல அரசு மற்றும் தனியார் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தினசரி பயன்படுத்தக்கூடிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்துத் துறைகளில் வர்த்தகமும் பாதிக்கப்படுட்டுள்ளன.
மோடி இந்த அறிவிக்கப்பட்ட காலத்தில் அதிம் பாதிக்கப்பட்ட துறைகள் எது தெரியுமா.?
இ-காமர்ஸ்
இ-காமர்ஸ் துறைகளின் வர்த்தகம் 60 முதல் 70 சதவீதம் வரை கேஷ் ஆண் டெலிவரி சேவைப் பதிப்பினால் குறைந்துள்ளது.
ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள்
மொபைல் போன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மக்களுக்கு உள்ள பணத்தட்டுபாட்டினாலும் போன்களை வாங்காததாலும் மோசமான வியாபாரத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் பல போன் நிறுவனங்கள் தங்களது புதிய போன் தயாரிப்புகளின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளனர்.
ஆடோமொபைல் துறை
நவம்பர் மாதம் கார், பைக் போன்ற வாகனங்கள் விற்பனை குறைந்து மோசமான நிலையில் வர்த்தகம் நடந்துள்ளது.
போக்குவரத்து துறை மற்றும் உணவு துறை
வெளிநாடு பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் சீசனில் போக்குவரத்து நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியர்களும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவது குறைந்துள்ளது. டெல்லி என்சிஆரில் உணவகங்கள், பார்கள் போன்றவற்றிலும் விற்பனை 28 சதவீதம் வரை குறைந்துள்ளது.
திரை அரங்குகள்
நகரங்களில் உள்ளவர்கள் பலர் திரை அரங்குகள் டிக்கெட்களை இணையதளம் மூலம் புக் செய்தாலும், பழைய ரூபாய் நோட்டுகளால் திரை அரங்கு உறிமையாலர்களும், சினிமா தயாரிப்பாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தங்கம் விற்பனை
மும்பையில் தங்கம் வாங்குவதற்குப் பேர் போன ஜவேரி பஜாரில் ஒரு நாளைக்குச் சராசரியாக 125 கோடி ரூபாய்க்குத் தங்கம் விற்கப்படும். ஆனால் இந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பில் இருந்து விற்பனை குறைந்து 13 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது.
நுகர்பொருட்கள்
நுகர்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் வர்த்தகம் 20 முதல் 30 சதவீதமும், கிராமப்புற கடைகளில் 40 முதல் 45 சதவீதமும் வியாபாரம் குறைந்துள்ளதாக ஒரு தனியார் நிறுவன ஆய்வறிக்கை கூறுகிறது.


Click it and Unblock the Notifications