மத்திய அரசு இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் புழக்கத்திற்கு முழுமையாகத் தடை விதித்ததன் மூலம் தினந்தோறும் பல அதிர்ச்சி தகவல்களை நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், நாட்டின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-யில் மும்பை வியாபாரி ஒருவர் 50 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளார்.
இந்தியாவில் பிரபல நடிகர்கள் கூட 2 கோடி ரூபாய் வரையிலான பென்ஷன் திட்டத்தை மட்டும் எடுத்துள்ள நிலையில் மோடியின் அறிவிப்பால் இந்த வியாபாரி 50 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளது வர்த்தகச் சந்தையில் அதிர்வுகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இந்தப் பெயர் தெரியப்படாத மும்பை வியாபாரி ரியல் எஸ்டேட் துறையில் இருப்பதாகவும், அவர் ஜீவன் அக்ஷய் திட்டத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிந்துள்ளது.

மேலும் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்சூரன்ஸ் திட்டத்தை மும்பை தாரார் கிளையில் செய்துள்ளார்.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் பல முக்கிய வியாபாரிகள், அரசு தலைவர்கள் எனப் பலதரப்பினர் இன்சூரன்ஸ் திட்டத்தில் அதிகத் தொகையை முதலீடு செய்வது இயல்பு.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் மோடி அறிவிப்பிற்குப் பின் வருடம் 15 லட்சம் ரூபாய் பிரீமியம் தொகை செலுத்தும் 2 கோடி ரூபாய் பென்ஷன் திட்டத்தைத் தேர்வு செய்துள்ளார். இதுகுறித்த தகவல்கள் எப்படி வெளியானது, என்பதை எல்ஐசி அமைப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் கடைசி நாளான நவம்பர் 30ஆம் தேதி 50 வயதுடையவர்களுக்கு அளிக்கப்படும் திட்டமாகும். நவம்பர் 30ஆம் தேதி இதன் வட்டி விகிதத்தை 7 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக மாற்றப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications