அமெரிக்காவில் 9 வருடம் காணாத வேலைவாய்ப்பின்மை.. வட்டி உயர்வு நிச்சயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்க இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு மறுப்பு..!

தங்க இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு மறுப்பு..!

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் பயன்பாட்டுத் தடை விதிக்கப்பட்ட நாள் முதல் இந்தியாவில் தங்க இறக்குமதியும், விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனுடன் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தங்கம் இறக்குமதியைக் குறைக்க மசோதா கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுகுறித்து எவ்விதமான அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
#Gold #Import

 

அமெரிக்காவில் 9 வருடம் காணாத வேலைவாய்ப்பின்மை.. வட்டி உயர்வு நிச்சயம்..!

அமெரிக்காவில் 9 வருடம் காணாத வேலைவாய்ப்பின்மை.. வட்டி உயர்வு நிச்சயம்..!

நவம்பர் மாத்தில் அமெரிக்காவில் புதிய வேவைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகியுள்ளதால் இந்நாட்டில் வேலைவாய்ப்பின்மை அளவுகள் 9 வருட சரிவை எட்டியுள்ளது.

விவசாயம் அல்லாத துறைகளில் அக்டோபர் 1,42,000 வேலைவாய்ப்புகளை மட்டுமே அளித்த அமெரிக்க அரசு, நவம்பர் மாத்தில் 1,78,000 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நவம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை அளவுகள் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதன் மூலம் டிசம்பர் மாதத்தில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் நடத்த உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி உயர்த்தியும் தனது திட்டத்தை நிறைவேற்ற உள்ளது உறுதியாகியுள்ளது.
#USA #JobsData

 

நோக்கியாவின் அடுத்தத் திட்டம் அதிரடி தான்..!
 

நோக்கியாவின் அடுத்தத் திட்டம் அதிரடி தான்..!

மொபைல் சந்தையில் முடிசூடா மண்ணாக இருந்து நோக்கியா, அண்ட்ராய்டு வந்த பிறகு இச்சந்தையில் ஸ்மார்ட்போன் வாயிலாகச் சாம்சங் மற்றும் ஐபோன் முக்கிய இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பல பிரச்சனைகளைச் சந்தித்து, சொத்துகள் விற்பனைக்குப் பின் தற்போது அடுக்கட்ட வளர்ச்சி திட்டத்தை வகுத்துள்ளது. இதன் மூலம் 2017ஆம் ஆண்டின் முதல் பாதியில் HMD குளோபல் நிறுவனத்தின் வாயிலாக நோக்கியா நிறுவனம் அண்ட்ராய்டு மென்பொருளுடன் புதிய ஸ்மார்ட்போனை சந்தையில் களமிறக்க உள்ளது.
#Nokia #Android #Samsung #Apple

 

என்எஸ்சி தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன் ராஜினாமா..!

என்எஸ்சி தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன் ராஜினாமா..!

நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தை நிறுவனமான என்எஸ்சி-யின் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய சந்தையில் பட்டியலிட விரும்பு நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் சித்ரா ராமகிருஷ்ணன் ராஜினமா செய்துள்ளார்.

கடந்த 23 வருடமாக இப்பதவியில் சித்ரா ராமகிருஷ்ணன் இயங்கி வருகிறார்.
#NSE

 

நிலக்கரி சுரங்க ஏலத்தின் மூலம் ஒடிசா 70,000 கோடி ரூபாய் பெறுகிறது..!

நிலக்கரி சுரங்க ஏலத்தின் மூலம் ஒடிசா 70,000 கோடி ரூபாய் பெறுகிறது..!

மத்திய அரசின் வெளிப்படையான ஏல முறையின் வாயிலாக இந்தியா முழுவதும் இருக்கும் நிலக்கரி சுரங்களை ஏலம் விடப்பட்ட நிலையில் 12 சுரங்கள் ஒடிசா மாநிலத்திற்குச் சொந்தமானது.

மத்திய அரசின் வாயிலாகச் செய்யப்பட்ட இந்த ஏலத்தின் மூலம் ஒடிசா மாநிலம் சுமார் 70,000 கோடி ரூபாய் பெற உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
#Coal #Auction #Odisha

 

முதல் முறையாகத் தனியார் நிறுவனத்துடன் ISRO ஒப்பந்தம்..!

முதல் முறையாகத் தனியார் நிறுவனத்துடன் ISRO ஒப்பந்தம்..!

இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சியில் முதல் முறையாக இறங்கிய தனியார் நிறுவனம் டீம்இன்டஸ். இந்நிறுவனம் கூகிள் லூனார் எக்ஸ்பிரைச்ஸ் போட்டிலியில் கலந்துகொண்டுள்ளது. இப்போட்டியின் பரிசு தொகை 30 மில்லியன் டாலர். இந்தியாவில் கலந்துகொள்ளும் ஓரே நிறுவனம் இது.

இப்போட்டியின் ஒரு பகுதியாக டீம்இன்டஸ் தயாரித்துள்ள இயந்திரத்தை நிலவில் தரையிறக்க வேண்டும்.

இதற்காக டிசம்பர் 2017ஆம் ஆண்டு ISRO விண்வெளிக்கு அனுப்பும் PSLV ராக்கெட்டில் டீம்இன்டஸ் உருவாக்கியுள்ள இயந்திரத்தை அனுப்ப இரு தரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த இயந்திரம் நிலவு குறித்துத் துல்லியமான வீடியோ, புகைப்படங்களைப் பூமிக்கு அனுப்பும்.
#ISRO #TeamIndus

 

மொபைல் வேலெட் சேவையை அறிமுகப்படுத்த எஸ்பிஐ வங்கி தீவிரம்..!

மொபைல் வேலெட் சேவையை அறிமுகப்படுத்த எஸ்பிஐ வங்கி தீவிரம்..!

டிசம்பர் மாதம் முதல் பாதிக்குள் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஸ்மார்ட்போன்களில் இயங்கும் மொபைல் வேலெட் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக இவ்வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

#SBI #MobileWallet

 

குஜராத் உயர்நீதிமன்றம் அறிவிப்பால் பிளிப்கார்ட் ஹேப்பி..!

குஜராத் உயர்நீதிமன்றம் அறிவிப்பால் பிளிப்கார்ட் ஹேப்பி..!

பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் நிறுவனத்தின் வாயிலாகக் குஜராத் மாநிலத்திற்கு வரும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள நுழைவு வரி சுமையைக் குறைக்கும் வகையில், இம்மாநிலத்தின் மத்திய விற்பனை வரியில் சில தளர்வுகளைப் பெற வகையில் புதிய திருத்தத்திற்குக் குஜராத் உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் இனி பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் போன்ற ஈகாமர்ஸ் நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் வர்த்தக விரிவாக்கத்திற்காக அதிகக் கவனத்தைச் செலுத்தலாம்.
#Gujarat #Ecommerce #Flipkart #Amazon

 

 
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

News in 30 seconds: Speaker Box - GoodReturns-Tamil - 02122016

News in 30 seconds: Speaker Box - GoodReturns-Tamil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X