தென் இந்தியாவின் முக்கிய மருத்துவச் சேவை நிறுவனமான அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனப் பங்குகள் இன்று சரிவடைந்துள்ளது.
கடந்த 6 மாதங்களாகத் தொடர் சரிவில் இருந்து வரும் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பிரதமர் மோடியின் 500 மற்றும் 1000 ரூபாய் தடை அறிவிப்புக்குப் பின் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

மேலும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாட்டால் இம்மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுத் தற்போது உடல் நலம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.21 சதவீதம் சரிந்து 1,197.50 ரூபாயாகக் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications