விளம்பர ஆஃபர் விலையாக 899 ரூபாய் முதல் விமான பயணம் செய்யலாம்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் குறிப்பிட்ட சில உள்நாட்டு வழித்தடங்களில் மட்டும் விளம்பர ஆஃபர் விலையாக 899 ரூபாய் முதல் விமான பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
சலுகை காலம்
ஜெட் ஏர்வேஸ் விமான சேவையில் டிசம்பர் 8 ஆம் தேதி வரை இந்தச் சலுகை விலையில் 15 நாட்களுக்கு முன்பு செல்லக்கூடிய டிக்கெட்களை புக் செய்யலாம். இந்த ஆஃபர் விலையில் எத்தனை டிகெட்டுகள் கிடைக்கும் என்ற விவரம் அளிக்கப்படவில்லை.
ஆனால் இந்த சலுகை விலை கட்டணம் குறைந்த அளவிலான சீட்டுகளுக்கு மட்டுமே என்றும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
வழித்தடம்
விமான நிறுவனத்தின் இணையதளத்தில் சென்னை முதல் கோயம்புத்தூர் செல்ல 899 ரூபாய் டிக்கெட் கட்டணம் என்று குறிப்பிட்டுள்ளது. பிற வழித்தடங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் இணையதளத்தைப் பார்க்கவும்.
வெளிநாட்டு பயணங்கள்
வெளிநாட்டு வழித்தடங்களிலும் 10,693 ரூபாய் முதல் விமான கட்டணங்களை அறிவித்துள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.
இண்டிகோ, ஏர் ஏசியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் சலுகை விலையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
விமான போக்குவரத்து
சலுகை விலை கட்டணங்களால் இந்தியாவில் விமான போக்குவரத்து துறை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 10 மாதங்களில் 23 சதவீதம் வரை உள்நாட்டு விமான பயணிகள் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டில் மட்டும் 85 கோடி ரூபாய் வரை மொத்த வருவாய் ஜெட் ஏர்வேஸ் பெற்றுள்ளதாகவும் இது இரண்டாவது காலாண்டை விட 3.2 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications