ரூ.5000 தாண்டினால் இனி மின்னணு பரிமாற்றம் தான்.. அரசு அமைப்புகளுக்கு ஜேட்லி உத்தரவு..!
அரசு அமைப்புகள், அரசு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் இனி 5000 ரூபாயக்கும் அதிகமான தொகையை மின்னணு பரிமாற்ற முறையில் தான் செய்ய வேண்டும்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இனி 5000 ரூபாய்க்கும் அதிகமான அனைத்து அரசு அமைப்புகளின் பரிமாற்றமும் மின்னணு முறையில் செய்யப்பட வேண்டும் என அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் இதன் அளவை 10,000 ரூபாயாக நிர்ணயம் செய்யாதது குறிப்பிடத்தக்கது. தற்போது டிஜிட்டல் முறை பரிமாற்றத்தின் அளவைப் பாதியாகக் குறைத்துள்ளது.

திங்கட்கிழமை மத்திய செலவின துறை வெளியிட்ட அறிக்கையில், இனி அரசு அமைப்புகள் விற்பனையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டிய தொகை 5000 ரூபாயைத் தாண்டினால் மின்னணு முறையில் மட்டுமே பணப் பரிமாற்றம் செய்யவேண்டும். பணமாக அளிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்ற முறையை இப்புதிய அறிவிப்பின் மூலம் அரசு அமைப்புகள் மத்தியில் 100 சதவீதம் நடைமுறைக்குக் கொண்டு வரும் திட்டமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications