பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாயாக உயர வாய்ப்பு..!
இந்தியாவில் ஒரு லிட்டர் 68 ரூபாய் என்று விற்கப்பட்டு வரும் பெட்ரோலின் விலை உலகளாவிய எண்ணை விலை உயர்ந்து பேரல் 60 டாலராக உயர வாய்ப்புள்ளதால் 80 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக கிரசல் ஏஜென்சி அறிக்கை
இந்தியாவில் ஒரு லிட்டர் 68 ரூபாய் என்று விற்கப்பட்டு வரும் பெட்ரோலின் விலை உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்து பேரல் 60 டாலராக உயர வாய்ப்புள்ளதால் 80 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக கிரிசில் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

2008 ஜனவரிக்குப் பின் முதல் முறையாக 2016 நவம்பர் 28ஆம் தேதி 1.2 பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் இருப்பு குறைந்து மார்ச் மாதத்திற்குள் 50-55 டாலாராக பேரலின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இது 60 டாலர் வரை எட்டலாம் என்றும் ஆய்வுகள் கூறுகிறது.
அதனால் இந்தியாவில் தற்போது 68 ரூபாயாக விற்கப்படும் 1 லிட்டர் பெட்ரோலின் விலை 80 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications