நாட்டின் முன்னணி கார் விற்பனை நிறுவனமான டோயோட்டா, வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
கார் தயாரிப்பில் உள்ளீடு செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் காரணமாகத் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாக டோயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களாக ஸ்டீல், அலுமினியம், காப்பர் மற்றும் ரப்பர் ஆகியவகற்றின் விலை அதிகரித்துள்ளது. இதனால் கார் தயாரிப்பின் உள்ளீடு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கார்களின் விலையை உயர்ந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று டோயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.ராஜா கூறினார்.
மேலும் சர்வதேச சந்தையில் யென் நாணயத்தின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் ஜப்பான் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டும் உதிரிபகங்களுக்காண கட்டணங்கள் மற்றும் செலவினங்களும் அதிகரித்துள்ளது இந்த விலை உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இன்றைய நிலையில் டோயோட்டா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் டோயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாயிலாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் தற்போது டோயோட்டா நிறுவனம் குறைந்த மதிப்புடைய ஹேச்பேக் மாடல் லிவா கார் (5.39 லட்சம் ரூபாய்) முதல் எஸ்வியூ மாடலான லேண்டு குரூசர்200 கார் (1.34 கோடி ரூபாய்) வரையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications