டீ கடையில் தனது வாழ்க்கையைத் துவங்கி நிதி அமைச்சர், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என்று உயர்ந்து இன்று மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்றுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி எப்படி ஒரு டீ கடையில் இருந்து குஜராத் முதல்வர் பின்பு நாட்டின் பிரதமர் வரை உயர்ந்தாரோ அதே போன்று ஓ பன்னீர்செல்வமும் டீ கடையில் தனது வாழ்க்கையைத் துவங்கி நிதி அமைச்சர், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என்று உயர்ந்து இன்று மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்றுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் நேற்று ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த மோடி ஓபிஎஸ் உடன் மேடையில் இரண்டு முறையும் காரில் ஏறும் போது ஒரு முறையும் ரகசியமாக பேசியதை நேரடி காட்சிகளில் காணவும் முடிந்தது.
இப்போது தமிழக முதலமைச்சர் அரியணையில் மூன்றாவது முறையாக அமர்ந்துள்ள ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி இங்குப் பார்ப்போம்.
யார் இந்த பன்னீர்செல்வம்?
எல்லோருக்கும் ஓபிஎஸ் என்று தெரிந்த இவர் ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கைக்கு உரியவர்.
இப்போது மூன்றாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமருவதற்கு முன்பு இரண்டு முறை இந்தப் பதவியை இவர் ஏற்றுள்ளார்.
நம்பிக்கைக்கு உரிய மனிதன்
பெரியகுளத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று முக்கியமான நிதி அமைச்சர் பதவியை வகித்து வந்தார்.
ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு அக்டோபர் 11 ஆம் தேதி முதல் ஜெயலலிதாவின் அனைத்துப் பணிகளையும் இவரே செய்து வந்தார்.
ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர்?
முதல் முறையாக 2001 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது முதல் அமைச்சர் நாற்காலியில் அமரப் பரிந்துரைக்கப்பட்டார் பன்னீர்செல்வம்.
அப்போது ஜெயலலிதாவின் நாற்காலியில் அமர மாட்டேன் என்று சொன்னதுடன் தனக்கென புதிய நாற்காலியை ஏற்பாடு செய்து ஜெயலலிதாவின் இருக்கைக்கு அடுத்து அமர்ந்து தனது பணிகளைச் செய்துவந்தார்.
இரண்டாவது முறை
2014 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து மீண்டும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் ஓபிஎஸ்.
அப்போது இவர் அழுந்துக்கொண்டே பதவி ஏற்றது உலகிற்கே தெரிந்த கதை.
காலம் பதில் சொல்லும்
திங்கட்கிழமை ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு மீண்டும் முதல்வர் பதவி ஏற்றுள்ளார்.
இப்படி ஒரு சிக்கலான சூழலில் எப்படி நாட்டை வழி நடத்துவார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.இவருடைய கடைசி பிரகண்டத்தின் படி 41,000 ரூபாய் பணமாகவும், 2.04 கோடி ரூபாய் கடனாகவும், தனது தொழிலாக விவசாயத்தையும் இவர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:


Click it and Unblock the Notifications