உர்ஜித் படேல் பதவி ஏற்ற பிறகு இரண்டாவது மதிப்பாய்வு அறிவிப்பு கூட்டம் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
உர்ஜித் படேல் பதவியேற்றிய பின் இரண்டாவது முறையாக இருமாத நாணய கொள்கையின் மறுஆய்வு கூட்டம் இவரது தலைமையில் இன்று நடந்ததது.
வங்கி ஊழியர்கள், வணிகச் சந்தை வல்லுனர்கள் என அனைத்துத் தரப்பினரும் ரெப்போ விகிதத்தில் குறைந்தபட்சம் 0.25 சதவீத வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி எவ்விதமான மாற்றத்தையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளும் அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 6.25 சதவீதமாவும், வணிகள வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் 5.75 சதவீதம் என்ற நிலையில் எவ்விதமான மாற்றமில்லாமல் அறிவித்துள்ளது.

மேலும் சமீபத்தில் ரிசர்வ் வங்கி சிஆர்ஆர் விகிதத்தில் அறிவித்த மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை வருகிற டிசம்பர் 10ஆம் தேதி முதல் திரும்பப்பெற திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை அடுத்து நாட்டின் பொருளாதாரம் மற்றும் நுகர்வோர்களின் நிலைமை ஆட்டம் கண்டது.
இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த ஆர்பிஐ 2017ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி அளவை 7.6 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பொருளாதார வல்லுனர்கள் பலர் 0.25 சதவீதம் வட்டி விகிதம் குறைய வப்புள்ளதாகவும் இன்னும் சிலர் 0.50 சதவீதம் வரை குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறிவந்தது தற்போது முற்றிலும் பொய்யாகிபோனது.


Click it and Unblock the Notifications