இனி கிரேடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வாயிலாக செய்யப்படும் 2000 ரூபாய்க்கு குறைவான பண பரிமாற்றம் மற்றும் பேமென்டுகளுக்கு சேவை வரி கிடையாது.!
டெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மீது விதிக்கப்பட்ட தடையில் பாதிப்புகளை மக்கள் மத்தியில் குறைக்க மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
டெபிட் கார்ட் மற்றும் கிரேடிட் கார்டு வாயிலாக 2000 ரூபாய்க்குக் குறைவான மதிப்பிற்கு எந்தப் பணப் பரிமாற்றம் செய்தாலும் அதற்கான சேவை வரி விதிப்பை முழுமையாக ரத்து செய்துள்ளது.
சேவை வரி ரத்து
டெபிட் கார்ட் மற்றும் கிரேடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மக்கள் பணப் பரிமாற்றம், பேமெண்ட் ஆகியவற்றைச் செய்யும்போது வங்கிகள் இச்சேவைக்கான வரியைத் தத்தம் கணக்குகளில் இருந்து பிடித்துக்கொள்ளும்.
தற்போது நாட்டில் நிலவி வரும் பணத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையிலும், டிஜிட்டல் பரிமாற்றங்களை ஆதரிக்கும் வகையிலும் டெபிட் கார்ட் மற்றும் கிரேடிட் கார்டுகளைப் பயன்படுத்தி 2000 ரூபாய் வரையிலான பரிமாற்றங்களுக்குச் சேவையை ரத்து செய்துள்ளது மத்திய அரசு.
அருண் ஜேட்லி
இதற்கான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வங்கிகளுக்கும் மற்றும் பேமெண்டு நிறுவனங்களும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பணத் தட்டுப்பாடு
இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பயன்பாட்டுக்கு பிரதமர் தடை விதித்துள்ள நிலையில் மக்கள் மத்தியிலும், வங்கிகளிலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மேலும் பணக் கருப்புப் பண ஆசாமிகள் புதிதாக வந்துள்ள 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டகளைப் பதுக்கி கொள்ளவதால், மக்களிடம் பணப் புழக்கம் அதிகளவில் குறைந்துள்ளது.
டிஜிட்டல் பரிமாற்றங்கள்
இந்த இக்கட்டான சூழ்நிலை மக்கள் மத்தியில் நிலவுகிறது என்று தெரிந்தும், மத்திய அரசு நாட்டில் உள்ள கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளைக் கணக்கில் கொண்டு வரும் வீதமாக டிஜிட்டல் பரிமாற்றங்கள் ஆதரித்துப் பல பணிகளைச் செய்து வருகிறது.
கருப்புப் பணத்தை வைத்திருக்கும் ஆசாமிகள் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை எப்படியும் வங்கி கணக்குகளுக்குக் கொண்டு வந்தாக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.
பிஓஎஸ்
இதனைத் தாண்டி அனைத்து இடங்களிலும் பணப் பிரிமாற்றம் செய்ய மக்களுக்கு ஏதுவாக வங்கிகளை வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் புதிதாக 10 லட்ச பிஓஎஸ் இயந்திரங்களை நாட்டின் பல்வேறு இடங்களில் நிறுவ உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications