மென்பொருள் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருந்தும் இன்போசிஸ் நிறுவனம் ஐபிஎம்-ஐ வெல்ல முடியலேயே.!
உலகின் முன்னணி மென்பொருள் மற்றும் வன்பொருள் நிறுவனமான ஐபிஎம்-இன் வர்த்தகம் சர்வதேச சந்தையில் சரிவை சந்தித்தாலும், இந்திய சந்தை மற்றும் வர்த்தகத்தில் தொடர்ந்து லாபத்தைப் பெற்று வருகிறது. ஏன் ஒட்டுமொத்த வர்த்தகச் சந்தையில் லாபம் அளிக்கும் ஒரே இடம் இந்திய சந்தை என்று சொன்னாலும் மிகையாகாது.
இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளில் தங்களது வர்த்தகம் மற்றும் வருவாய் அளவுகளை உயர்த்தத் தவறிய காரணத்தால் ஜூன்-அக்டோபர் காலாண்டில் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான மார்டின் ஸ்ர்ரோரெடர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
1.3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..?
ஐபிஎம் இந்தியா
உலகளவில் வர்த்தகம் செய்து வரும் ஐபிஎம், இந்திய சந்தையில் மட்டும் அசத்தி வருகிறது. 2015-16ஆம் நிதியாண்டில் ஐபிஎம் நிறுவனத்தின் இந்திய கிளையின் வருவாய் அளவு 10.3 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 3.11 பில்லியன் டாலரில் இருந்து 3.43 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஏற்றுமதி வர்த்தகம்
இந்திய சந்தையில் இருக்கும் ஐடி நிறுவனங்களை ஒப்பிடுகையில் ஐபிஎம் இந்தியா அதிகளவிலான ஐடி சேவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த ஏற்றுமதிக்கு இணையாக அளவிற்கு இதன் ஊழியர்களுக்குச் சம்பளத்தை வாரி வழங்கி வருகிறது.
1 கோடி ரூபாய் சம்பளம்
இந்திய ஐடி நிறுவனங்களில் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது எளிதான காரியம் அல்ல, காரணம் இந்திய சந்தையில் இருக்கும் போட்டி. அதே சமயம் இங்குத் திறமைகளுக்குப் பஞ்சமில்லை.
133 பேர்
ஐபிஎம் நிறுவனத்தின் இந்திய பிரிவில் சுமார் 1.3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 133 பேருக்கு ஐபிஎம் நிர்வாகம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தை அளித்து வருகிறது.
இந்திய சந்தையில் மென்பொருள் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனம் வெறும் 49 பேருக்கு தான் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தை வழங்குகிறது.
ஆசிய பசிபிக் சந்தை
ஐபிஎம் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் சந்தையில் வர்த்தகத்தில் ஜப்பான் மற்றும் சீன நாட்டு வர்த்தகத்தில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளதால், இந்திய சந்தையில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது.
மேலும் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி, மற்றும் டிஜிட்டல் திட்டங்களில் அதிகப்படியான பங்களிப்பை அளித்துப் புதிய வர்த்தகத்தைப் பெற ஐபிஎம் தனது ஊழியர்களுக்குச் சம்பளத்தை வாரி வழங்கியுள்ளது.
4 முக்கிய வர்த்தகம்
ஐபிஎம் இந்தியாவிற்கு வன்பொருள், மென்பொருள், நிதியியல் மற்றும் சேவைகளின் விற்பனை என நான்கு முக்கிய வர்த்தகப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டில் வன்பொருள் மற்றும் மென்பொருள் வர்த்தகப் பரிவில் 16.4 சதவீதம் மற்றும் 4.9 சதவீதம் அளவிற்கு வர்த்தகப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.
லாபம்
வன்பொருள் மற்றும் மென்பொருள் பிரிவின் சரிவைச் சந்தித்தாலும் லாபத்தில் 12.6 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது ஐபிஎம்.
18 மாதங்கள் தொடர் சரிவு
இந்திய வர்த்தகம் லாபத்தில் இருந்தாலும் ஐபிஎம் உலகளாவிய வர்த்தகம் கடந்த 18 மாதங்ளாகத் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இணைப்பு
இந்தியாவில் பிக்பிக்ஸ் சாப்வேர், டெலிலாஜிக் இந்தியா மற்றும் யூனிகா சாப்டெக் சிஸ்டம்ஸ் இந்தியா ஆகிய 3 வர்த்தகப் பிரிவுகளையும் ஸ்டெர்லிங் காமர்ஸ் சொல்யூஷன்ஸ் இந்தியா என ஒன்றை நிறுவனமாகப் புதுப்பித்துள்ளது. ஐபிஎம் இந்திய வர்த்தகத்தில் மிகமுக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications