விமான நிறுவனங்கள் இப்படி போட்டா போட்டியில் சலுகைகளை அறிவிப்பதால் ஜனவரி-அக்டோபர் வரை மட்டும் 23 சதவீதமாக விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
2016-ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான இண்டிகோ தனது விமான சேவையில் வழங்கிய சலுகை காலத்தை நீட்டித்து அறிவித்துள்ளது.
இண்டிகோ விமான சேவையில் 2016, டிசம்பர் 20 முதல் 2017 அக்டோபர் 28 வரையிலான பயணங்களுக்கான டிக்கெட்களை 799 ரூபாயில் டிசம்பர் 10 வரை முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆஃபர் உள்ள வழித்தடங்கள்கொச்சி-திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர்-சென்னை வழித்தடத்தில் 799 ரூபாய்க்குப் பயணம் செய்யலாம். பெங்களூர்-மும்பை செல்ல 1,683 ரூபாயும், டெல்லி- மும்பை செக்க 1,988 ரூபாயும் என டிக்கெட் விலை இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் தனது விமான சேவையின் சலுகை விலையை டிசம்பர் 10 ஆம் தேதி வரை உயர்த்தி உள்ளது. சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல 899 ரூபாய் என டிக்கெட் விலை அறிவித்துள்ளது. இந்தச் சலுகை விலையில் 2017 ஜனவரி 5-க்கு பிறகு செய்யலாம் என்றும் ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தச் சலுகை முதல் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும் அறிவித்துள்ளது. ஏர் ஏசியா விமான நிறுவனம் 1,015 ரூபாய்க்குச் சலுகை டிக்கெட்களை அறிவித்துள்ளது. இந்தச் சலுகை விலையில் ஹைதராபாத்-பெங்களுரூ செல்ல 1,015 ரூபாய் என்றும் டெல்லி-பெங்களுரூ செல்ல 2,515 ரூபாய் என்றும் கூறப்பட்கின்றது. இந்த சலுகை விலையில் 2017 ஜனவரி 6 முதல் மே 25 வரையிலான பயண டிக்கெட்களை டிசம்பர் 1 வரை முன்பதிவு செய்யலாம். விமான நிறுவனங்கள் இப்படி போட்டா போட்டியில் சலுகைகளை அறிவிப்பதால் ஜனவரி-அக்டோபர் வரை மட்டும் 23 சதவீதமாக விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இண்டிகோ
ஜெட் ஏர்வேஸ்
ஏர் ஏசியா
விமான போக்குவரத்து


Click it and Unblock the Notifications