ஹாட் நியூஸை ஷாட்டா படிக்க: 'ஸ்பீக்கர் பாக்ஸ்'
Lego நிறுவனத்தின் புதிய சீஇஓ ஒரு இந்தியர்..!
டென்மார்க் நகரத்தைத் தலைமையாகக் கொண்டு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்பதிலும் உலகளவிலான விற்பனை சந்தையிலும் முதல் இடத்தில் இருக்கும் Lego நிறுவனத்தின் சீஇஓ-வான விக் குந்ஸ்டிராப் 2016ஆம் ஆண்டுக் கடைசியில் தனது பதவியில் இருந்து விலகுகிறார்.
இந்நிலையில் Lego நிறுவனத்தை நிர்வகித்தும் வரும் நிறுவனரின் குடும்பம் முதல் முறையாக வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை சீஇஓவாக நியமித்துள்ளது. இப்படி நியமிக்கப்பட்டவர் ஒரு இந்தியர், அவர் பெயர் பிரின்டன் பாலி பாடா ஆவார்.
#Lego
50 வங்கி கிளைகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை..!
பிரதமர் மோடி நவம்பர்8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்த நிலையில் மக்களிடத்தில் இருக்கும் அதிகளவிலான கருப்புப் பணத்தை வங்கி அதிகாரிகளின் வாயிலாகப் பல வழிகளில் வெள்ளையாக மாற்றப்படுகிறது கண்டுப்பிடக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருக்கும் 50 வங்கி கிளைகளில் அதிரடியாக அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது.
#ED
கருப்புப் பணம்: சென்னையில் 105 கோடி ரூபாய், 35 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கைப்பற்றல்
மோடியின் அறிவிப்புக்குப் பின் இந்தியாவில் பல பகுதிகளில் பல வகைகளில் புதைந்துக்கிடக்கும் கருப்புப் பணம் வெளி வருகிறது.
இந்நிலையில் வருமான வரித்துறைக்கு ரகசியமாக வந்த தகவல் மூலம் சென்னை மற்றும் வேலூர் பகுதிகளில் 8 இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் சுமார் 105 கோடி ரூபாய் ரொக்கம் 35 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டது.
#BlackMoney #chennai
குஜராத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்..!
உலகிலேயே அதிகப் பார்வையாளர்களை அமர்ந்து பார்க்க கூடிய மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தைக் குஜராத் கிரிக்கெட் சங்கம் கட்ட முடிவு செய்துள்ளது.
இதனைக் கட்டுவதற்கு எல் அண்ட் டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் இரு தரப்பும் கட்டுமான பணிகளைத் துவங்குவதற்கான ஒப்பந்தகளைக் கையெழுத்திட்டுள்ளது.
#Gujarat #Cricket
அக்டோபர் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி சரிவு..!
நாட்டின் தொழிற்துறை உற்பத்தி செப்டம்பர் மாத்தில் கணிசமாக உயர்ந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் 1.9 சதவீதம் அளவிற்குச் சரிந்துள்ளது.
குறிப்பாகக் கேபில், கார்பெட் மற்றும் தோல் ஆடைகளின் உற்பத்தி அதிகளவிலான பாதிக்கப்பட்டுள்ளது.
#IIP
143 கோடி நஷ்டத்தில் புட்பாண்டா..!
நாட்டின் முன்னணி ஆன்லைன் உணவு ஆர்டர் செய்யும் நிறுவனமான புட்பாண்டா 2015-16ஆம் நிதியாண்டில் 4 மடங்கு அதிக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. 2014-15ஆம் ஆண்டில் வெறும் 36 கோடி நஷ்டத்தைச் சந்தித்த புட்பாண்டா 2015-16ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 142.6 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பெற்றுள்ளது.
#Foodpanda
16.6 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற பேஸ்புக்..!
உலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் இந்தியாவில் 16.6 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று தொடர்ந்த வர்த்தக உயர்வைச் சந்தித்து வருகிறது.
#பேஸ்புக்
‘பனியா'காரர்கள்
இன்போசிஸ்
செல்வ மகள் திட்டம்
799 ரூபாயில் விமான பயணம்
பேடிஎம்
வீட்டுக் கடன்
800 ஊழியர்கள் பணிநீக்கம்..!
மும்பை பங்குச்சந்தை
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications