பொருட்கள் இறக்குமதி செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வர்த்தகர்கள் கோரிக்கை
இந்தியாவில் பணப் பிரச்சனை குறையும் வரை பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் ஏதும் அனுப்ப வேண்டாம் என்று பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்திய வர்த்தகர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
சுமை தூக்கும் தொழிலாளிகள் வேலை நிறுத்தம்
நமக்குக் கிடைத்துள்ள அத்தாரங்களின் படி வியாழக்கிழமை மட்டும் ஒரு டிரக் பொருட்கள் கூட வரவில்லை என்று மத்திய கிடங்கு கழகத்தில் உள்ள சேவை வழங்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பொருட்களை ஏற்றவும், இறக்குமதி செய்யவும் போதுமான பணம் இல்லாததே காரணம் என்றும் கூறியுள்ளனர்.
சுமை தூக்கும் தொழிலாளிகளுக்குச் சரியான கூலி கிடைக்காததால் அவர்கள் புதன்கிழமை வேலை நிறுத்ததில் ஈடுபட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுமை தூக்கும் தொழிலாளிகள்
மொத்தம் உள்ள 1,433 சுமை தூக்கும் தொழிலாளியிடமும் வங்கி கணக்கு விவரங்கள் கேட்கப்பட்டது. ஆனால் சில மட்டுமே வங்கி கணக்கு விவரங்களை அளித்ததாகவும் அவர்களுக்கு மட்டும் கூலி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பலர் தங்களது விவரங்களை அளிக்காததால் பணமாக அளிக்க முடியவில்லை என்றும் சோதனைச் சாவடி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
கூலியை காசோலையாக பெற விரும்பவில்லை
சுமை தூக்கும் தொழிலாளிகளின் தலைவர் சுபேக் சிங் இது பற்றி கூறுகையில் தொழிலாளர்கள் காசோலைகளாக்க கூலியைப் பெற விரும்பவில்லை என்றும் பணமாகவே பெற விரும்புகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
சில சுமை தூக்கும் தொழிலாளிகளின் தலைவர்கள் வங்கி கணக்கை அளிக்க விடுவதில்லை என்றும் இதுவே அவர்கள் வங்கி கணக்கு விவரங்களை அளித்தால் அனைவருக்கும் நேரடியாகக் கூலி கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications