பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக்கூறுவை பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு!
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பொருட்கள் கொள்முதல் பணியில் இறங்கி உள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக்கூறு
பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக்கூறுவை பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப் பொருட்கள் கொள்முதல் பணியில் இறங்கி உள்ளதாக மாநிலங்களின் நிதி அமைச்சரான அர்ஜூன் ராம் லோக் சபாவில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போது தெரிவித்துள்ளார்.
சோதனை முயற்சி
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை சில சோதனை முயற்சிகளுக்குப் பிறகு ஆர்பிஐ வெளியிட இருந்தது.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளைக் காகிதத்தில் அச்சடிப்பதை தவிர்த்து பிளாஸ்டிக் இழைகளில் அச்சடிக்க ரிசர்வ் வங்கி 2010ஆம் ஆண்டு துவக்கத்தில் முடிவு செய்தது.
சில நகரங்களில் சோதனை
ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி பிளாஸ்டிக் இழைகளில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் துவங்கியது. இந்த ரூபாய் நோட்டுகளை இந்தியா முழுவதும் ஒரே சமயத்தில் வெளியிடாமல் சோதனை முயற்சியாக சில நகரங்களில் மட்டும் செயல்படுத்த ரிசரவ் வங்கி வெளியிட்டது.
சோதனை நடைபெற்ற நகரங்கள்
முதற்கட்டமாக 10 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் வெளியிட்டனர்.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம்
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் சராசரி ஆயுட்காலம் 5 வருடம் என்றும் கள்ளநோட்டு அடிக்க இயலாது என்றும் கூறுகின்றனர். பேப்பரில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை விட பிளாஸ்டிக்கில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் சுத்தமாகவும் இருக்கும்.
முதல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் 1968ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டாலர்கள் அச்சடிக்கப்பட்டது. இது மிகவும் பாதுகாப்பானது. இத்தகைய பிளாஸ்டிக் நோட்டுகளைக் கள்ளத்தனமாக அச்சிட முடியாது.
மேலும் படிக்க:
வீடியோ
வீடியோ
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications