நவம்பர் 8ஆம் தேதி மாலை நாடாளுமன்றத்தில் அவசர கூட்டம் முடிந்த உடன் பிரதமர் தொலைக்காட்சி மற்றும் சமுக ஊடகங்கள் வாயிலாக மோடி மக்கள் மத்தியில் நேரடியாகப் பேசினார். கடந்த 2 தலைமுறை கேள்விப்பட்டிராத ஒரு அறிவிப்பை மோடி அறிவித்தார்.
இந்தியாவில் இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சொல்லாது, அதை எவ்விதமான பணப் பரிமாற்றத்திற்காகவும் பயன்படுத்த முடியாது, இனி இவை வெறும் காகிதம் என்று கூறினார் மோடி.
50 நாட்கள்
அடுத்த 50 நாட்களுக்குள் வங்கி, தபால் நிலையங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களின் வாயிலாக மக்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
85 சதவீத நாணயங்கள்
இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் இருக்கும் 85 சதவீத நாணயங்கள் செல்லாத வெறும் காகிதமாக மாறிப்போயின. மோடியின் இந்த அறிவிப்பின் மூலம் வியாபாரிகள் படும்பாட்டைக் கொஞ்சம் பாருங்கள்.
வியாபாரிகள்
மோடியின் இந்த அறிவிப்பு வெளியாகி 30 நாட்கள் முழுவதுமாக முடிந்துள்ளது. இந்நிலையில் நாட்டில் பணப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கிராமங்கள் முதல் பெரு நகரங்களில் இருக்கும் வியாபாரிகள் தங்களது நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் குறைந்துள்ளது எனப் புலம்பி தள்ளுகின்றனர்.
தினசரி செலவுகள்
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 32 நாட்கள் முடிந்த நிலையில் மக்கள் ஏடிஎம், வங்கிகள், தபால் நிலையங்களில் கிடைக்கும் பணத்தை மிகவும் திட்டமிட்ட முறையில் செலவு செய்து தங்களின் அன்றாடத் தேவைகளை மட்டுமே பூர்த்திச் செய்து வருகின்றனர்.
குறிப்பாகப் பால், காய்கறிகள், உணவுப் பொருட்கள், மின்சாரம், போன்ற வீட்டுக்கும் தனிமனிதர்களின் அடிப்படைத் தேவைகளை மட்டுமே பூர்த்திச் செய்யப்பட்டு வருகின்றனர்.
துவக்கத்தில்..
அறிவிப்பு வெளியான சில நாட்களில் மக்கள் செய்வதறியாது பல பரிச்சனைகளைச் சந்தித்தனர்.
ஆனால் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாக மக்கள் திரும்பவில்லை என்றாலும், நிலையான வாழ்க்கை முறையைப் பெற்றுள்ளனர் என்றால் மறுக்க முடியாது.
இப்போது பாதிக்கப்பட்டுள்ளது ஆடம்பர சந்தை நிறுவனங்கள் தான்.
ஆடம்பர பொருட்கள்
நவம்பர் 8ஆம் தேதி இரவு வெளியான அறிவிப்புக்குப் பின் அடுத்த 3 நாட்களுக்கு மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு ஐபோன், ஆடம்பர கார்கள் புக்கிங், ரியல் எஸ்டேடில் முதலீடு எனச் சில பரிமாற்றங்கள் செய்யப்பட்டாலும், பின் அதன் நடவடிக்கை முழுமையாக முடங்கியது.
70 சதவீதம் சரிவு
மும்பை ஆடம்பர சந்தையில் மட்டும் அக்டோபர் மாத வர்த்தகத்தை ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தில் இதன் வர்த்தகம் சுமார் 70 சதவீதம் வரை சரிந்துள்ளது.
மேலும் பல முக்கிய நிறுவனங்களில் காலையில் நடக்கும் முக்கியமான சேல்ஸ் கூட்டங்களை ரத்து செய்துள்ளனர். மீட்டிங் வைத்தால் மட்டும் என்ன நடக்கப்போகிறது என்றுதான்.
முக்கிய மால்கள்
இந்தியாவில் கடந்த 20 வருடத்தில் மால் கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்றால் மறுக்க முடியாது. ஆண்ணாச்சி கடைகளில் முந்தியடித்துக்கொண்டு வாங்கும் தலைகள் எல்லாம் இப்போது டிராலிகளைத் தள்ளிக்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் டிஎல்எப் எம்போரியா, பெங்களூரில் போரம், பீனிக்ஸ், சென்னையில் பீனிக்ஸ், கோவையில் பூரூக்பீல்ட் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் குறைந்தது மட்டும் அல்லாமல் வர்த்தகம் 70 முதல் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது.
பான் கார்டு கட்டாயம்
ஆடம்பர சந்தை நிறுவனங்களை மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து சோகமடையச் செய்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான அனைத்துப் பரிமாற்றங்களுக்குப் பான் கார்டு குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இதன் வாயிலாகவும் மக்கள் அதிகளவில் ஆடம்பர சந்தையைப் புறக்கணித்து வந்தனர்.
500 மற்றும் 1000 ரூபாய் தடை
பான் கார்டிற்கு அடுத்தாகத் தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் தடை இந்திய ஆடம்பர சந்தையை அதிகளவில் பாதித்துள்ளது.
இந்தப் பாதிப்பு ஆடம்பர சந்தையில் அடுத்தச் சில மாதங்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications