யார்யார் எவ்வளவு டெப்பாசிட் செய்தார்கள்? டிச.16குள் அறிக்கை வேண்டும்: வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் உட்படப் பிற ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் எவ்வளவு டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற கணக்கை வைத்திருக்குமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து 12 லட்சம் கோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இதில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க அனைத்து பொதுத் துறை வங்கிகளையும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் உட்படப் பிற ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் எவ்வளவு டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற கணக்கை வைத்திருக்குமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

முக்கிய அதிகாரிகளுக்கு கடிதம்

முக்கிய அதிகாரிகளுக்கு கடிதம்

இதற்காக நிதி அமைச்சகம் பொதுத் துறை வங்கிகளின் அனைத்து முக்கிய அதிகாரிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. இதில் செல்லாத நோட்டு மற்றும் செல்லும் நோட்டுகள் என எவ்வளவு டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற பதிவுகள் மற்றும் வாடிக்கையாளர்கள் விவரங்களையும் பாதுகாப்பாக சேமிக்க வலியுறுத்தி உள்ளன.

நிர்வாக தலைவர்களுக்கு கடிதம்

நிர்வாக தலைவர்களுக்கு கடிதம்

அரசு வங்கிகள் மற்றும் இந்தியன் வங்கி நிர்வாக தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் நிதி அமைச்சகம் அவசரக் கால அடிப்படையில் 16 டிசம்பருக்குள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வெண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு தொடர்ந்து நடக்க வேண்டும் என்றும், இது சம்மதமாக நடவடிக்கைகளில் ஏதேனும் தடங்கள் ஏற்பட்டால் அதனை உடனடியாக உறுதியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளனர்.

 

100 சதவீதம் சரியாக செயல்பட்டுள்ளதா

100 சதவீதம் சரியாக செயல்பட்டுள்ளதா

பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குச் சரியான முறையில் விவரங்களை அளித்திருக்கும் நிலையில் இது 100 சதவீதம் சரியாக செயல்பட்டுள்ளதா என்று மறுமுறை சரிபார்க்க வேண்டும். அனைத்து வங்கிகளுக்கும் பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுகளைச் சரியான முறையில் பெற வேண்டும் என்றும், இந்த விவரங்களை வாடிக்கையாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

வங்கிகளில் அறிவிப்பு பலகை

வங்கிகளில் அறிவிப்பு பலகை

நிதி அமைச்சகம் மேலும் வங்கிகளிடம் இதற்கான அறிவிப்பு பலகையை அனைத்து வங்கிகளில் தங்களது கிளை உள்ள வட்டார மொழிகளில் வைக்க வேண்டும் என்றும், டெப்பாசிட் சீட்டுகளிலும் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

12 லட்சம் கோடி ரூபாய்

12 லட்சம் கோடி ரூபாய்

ஆர்பிஐ வங்கியைப் பொருத்த வரை கிட்டத்தட்ட 15.4 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் மோடி அறிவித்ததில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 வங்கிகளுக்கு பாராட்டு

வங்கிகளுக்கு பாராட்டு

மேலும் வங்கிகளைச் சிறந்த முறையில் செயல்பட்டதற்காக நிதி அமைச்சகம் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+