கள்ள நோட்டு: சிக்கியது மட்டும் ரூ.400 கோடி

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 86 சதவீத ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று மோடி அறிவித்ததற்கான முக்கிய காரணம் கள்ள நோட்டு. 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் 400 கோடி ரூபாய் கள்ள நோட்டு பிடிபட்டதாக இந்தியா ஸ்பெண்டு ஆய்வு கூறுகிறது.

2015ஆம் நிதியாண்டின் படி இந்தியாவில் 500, 1000, 100, 50, 20, 10, 5, 2 மற்றும் 1 ரூபாயாக சுமார் 16.41 லட்சம் கோடி ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாக ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் மதிப்பு எவ்வளவு தெரியுமா..? 

2 மற்றும் 5 ரூபாய் நோட்டுகள்

இந்தியாவில் மொத்தம் 11,626 மில்லியன் இரண்டு மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இவற்றின் மதிப்பு 4,069.1 கோடி ரூபாயாகும்.

2015-2016 ஆம் நிதி ஆண்டில் 5 ரூபாய் நோட்டு ஒன்றும், 2 ரூபாய் நோட்டு ஒன்றும் சிக்கியுள்ளன. இவற்றின் மதிப்பு 7 ரூபாய் ஆகும்.

 

10 ரூபாய் நோட்டுகள்

நாட்டில் மொத்தம் 32,015 மில்லியன் ரூபாய் நோட்டுகள் 32,015 கோடி ரூபாய் மதிப்பில் பயன்பாட்டில் உள்ளதாகவும் அதில் 134 ரூபாய் கள்ள நோட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிடிபட்ட 10 ரூபாய் கள்ள நோட்டுகளின் மதிப்பு 1,340 ரூபாய் எனவும் கூறியுள்ளனர்.

 

20 ரூபாய் நோட்டுகள்

4,924 மில்லியன் 20 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் அதன் மதிப்பு 9,548 கோடி ரூபாய் ஆகும்.

20 ரூபாய் நோட்டுகளில் மொத்தம் 96 கள்ள நோட்டுகள் அதாவது 1,920 ரூபாய் சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

50 ரூபாய் நோட்டுகள்

3,890 மில்லியன் 50 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் மதிப்பு 19,450 ரூபாயும் ஆகும்.

50 ரூபாய் நோட்டுகளில் மொத்தம் 6453 கள்ள நோட்டுகள் சிக்கியதாகவும் அவற்றின் மதிப்பு 3,22,650 ரூபாய் என்று கூறியுள்ளனர்.

 

100 ரூபாய் நோட்டுகள்

15,778 மில்லியன் 100 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டில் உள்ளன. இதன் மதிப்பு 1,57,780 கோடி ரூபாயாகும்.

100 ரூபாய் நோட்டில் 2,21,447 கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளதாகவும் அவற்றின் மதிப்பு 2.21 கோடி என்றும் கூறப்படுகின்றது.

 

500 ரூபாய் நோட்டுகள்

15,707 மில்லியன் 500 ரூபாய் நோட்டுகள் என்றும் இவற்றின் மதிப்பு 7,85,350 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகின்றது.

500 ரூபாய் நோட்டுகளில் 2,61,695 நோட்டுகள் கள்ள பனம் கண்டறியப்பட்டதாகவும் இதன் மதிப்பு 13,09 கோடி எனவும் கூறப்படுகின்றது

 

1000 ரூபாய் நோட்டுகள்

6,326 மில்லியன் ரூபாய் 1000 நோட்டுகள் பயன்பாட்டில் இருந்ததாகவும் அவற்றின் மதிப்பு 6,35,600 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1000 ரூபாய் நோட்டுகளில் 1,43,099 நோட்டுகள் கள்ளப்பணமாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதன் மதிப்பு 14.31 கோடி என்றும் கூறப்படுகின்றது.

 

43.8 கோடி கள்ள பணம்

2015 ஆண்டு மட்டும் 43.8 கோடி ரூபாய் கள்ளப்பணம் கண்டறியப்பட்டதாக லோக் சபாவில் நவம்பர் 18 ஆம் தேதி கூறப்பட்டது.

ஒவ்வொரு மில்லியனிலும் 250 நோட்டுகள்

கள்ள பனம் ஒவ்வொரு மில்லியனிலும் 250 நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

3-7% கருப்புப் பணம்

2012 ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த பிரனாப் முக்கர்ஜி 3.7 முதல் 7.4 சதவீதம் வரை கணக்கில் காண்பிக்கப்படாத வருமானம் உள்ளதாக வெள்ளை அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

2016 நவம்பர் 15 ஆம் தேதி சீதாராம் யெச்சூரி வெளியிட்ட டிவிட்டில் நாட்டின் பொருளாதாரத்தில் 6 சதவீதம் வரை கருப்புப் பணம் கணக்கில் காட்டப்படாமல் இருப்பதாகக் கூறியிருந்தார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Just how many fake notes were actually detected in India last year?

Just how many fake notes were actually detected in India last year? The value of fake currency in circulation at any given time is Rs 400 crore, according to a study.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns