வியாழக்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி டிஜிட்டல் முறையில் பெட்ரோல் மற்றும் டிசல் வாங்குவோருக்கு 0.75 சதவீதம் வரை சலுகை கிடைக்கும் என்று அறிவித்தார்.
டெல்லி: சென்ற வாரம் வியாழக்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி டிஜிட்டல் முறையில் பெட்ரோல் மற்றும் டிசல் வாங்குவோருக்கு 0.75 சதவீதம் வரை சலுகை கிடைக்கும் என்று அறிவித்தார்.
நள்ளிரவு முதல் சலுகை
இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் டிஜிட்டல் முறையில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவோருக்கு 0.75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்தியன் ஆயில் நிறுவனம்
திங்கட்கிழமை இதைப் பற்றி கூரிய இந்தியன் ஆயில் நிறுவனம் நள்ளிரவு முதல் சலுகை விலையில் பெட்ரோல் பெற இயலும் என்றும், பெட்ரோல் வாங்கும் போது முழுத் தொகையும் செலுத்த வேண்டும் என்றும் அதன் மீதான சலுகை மூன்று தினங்களில் வாடிக்கையாளர்களின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
1 லிட்டருக்கு எவ்வளவு சலுகை
கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது 1 லிட்டர் பெட்ரோலுக்கு 49 பைசாவும், 1 லிட்டர் டீசலுக்கு 41 பைசாவும் சலுகையாக கிடைக்கும்.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 65.58 ரூபாய் எனவும், டீசல் விலை 56.10 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications