பதுக்கி வைக்கப்பட்ட '2000 ரூபாய்' நோட்டுகளை கப்புகப்புன்னு பிடிக்க இதுதான் காரணமாம்..!

இந்திய மக்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டை கதிர்வீச்சு மையால் அச்சடிக்கப்பட்டுள்ளது. பதுக்கி வைத்தால் ஜெயில் நிச்சயம்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் 2000 ரூபாய் புழக்கத்திற்கு வந்த நாள் முதல் இதுகுறித்துத் தினமும் ஒரு புரளி வருகிறது, இதில் நேநோ ஜிபிஎஸ் புரளி அதிரிபுதிரியானது.

இந்தப் புரளியின் இம்சை தாங்க முடியாமல், மத்திய அரசே நேநோ ஜிபிஎஸ் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் புரளியே, மக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் எனவும், புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் போன்ற எதுவுமில்லை எனவும் தெளிவுபடுத்தியது.

நேநோ ஜிபிஎஸ் புரளியை தூக்கிச் சாப்பிடும் அளவிற்குத் தற்போது புதிய செய்தி வந்துள்ளது. இதுதான் 'Radioactive Ink'.

2000 ரூபாய் நோட்டுகள்

2000 ரூபாய் நோட்டுகள்

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின் நாட்டில் உள்ள கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் மீதான புழக்கத்தைத் தடை செய்தது.

இதற்கு மாறாகப் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

 

 

இதில் தான் பிரச்சனை..

இதில் தான் பிரச்சனை..

புதிதாக அச்சிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகள் P32 என்ற கதிரியக்க ஐசோடோப்புக் கொண்ட மையால் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த மையில் 15 புரோட்டான் மற்றும் 17 நியூட்டரான் கொண்டு Radioactive பொருள் மூலம் மக்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மிகவும் குறைவான அளவுகளான Radioactive பொருள் கொண்டு இவை அச்சிடப்பட்டுள்ளது என்ற புரளி சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 

நிறம்

நிறம்

மேலும் 2000 ரூபாய் நோட்கள் வெளியிட்ட சில நாட்களில் இதில் இருக்கும் நிறம் தண்ணீர் மற்றும் துணியைக் கொண்டு தேய்க்கும் போது சாயம் போவது மக்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டு வந்தது.

ஆனால் புதிய மற்றும் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய், 100 ரூபாய் நோட்களில் இதுவரை சாயம்போனதில்லை. தற்போது 2000 ரூபாய் நோட்டில் சாயம் போவதற்கும் இந்த 'Radioactive Ink' தான் காரணம் என்றும் புரளி பரவி வருகிறது.

 

பதுக்கல்

பதுக்கல்

இந்த 'Radioactive Ink' வாயிலாக வெளிப்படும் கதிர் வீச்சுகள் மூலமாகவே தற்போது வருமான வரித் துறையினர் நடத்தும் சோதனையில் கட்டுக்கட்டாகப் பதுக்கப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சிக்குகிறது என்ற சந்தேகம் எழுகிறது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

'Radioactive Ink' உண்மை என்றால் பணம் பதுக்கும் ஆசாமிகளுக்கு அது சோகமான செய்தி என்றாலும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி.

உறுதி..

உறுதி..

இதுவரை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 'Radioactive Ink' குறித்த செய்திகளுக்கும் வதந்திகளும் பொய் என எவ்விதமான தகவல்களையும் வெளியிடவில்லை.

எஸ் குருமூர்த்தி

எஸ் குருமூர்த்தி

<strong>2000 ரூபாய் நோட்டுகளை பதுக்குவதற்கு முன்பு உஷாராக இருங்கள்: எஸ் குருமூர்த்தி</strong>2000 ரூபாய் நோட்டுகளை பதுக்குவதற்கு முன்பு உஷாராக இருங்கள்: எஸ் குருமூர்த்தி

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 2000 currency notes printed with special ink: theory goes viral

Rs 2000 currency notes printed with special ink: theory goes viral - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X