2017-ம் ஆண்டு ஆசிய பெசிபிக் நாடுகளில் இந்தியர்களுக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்குமாம்..!
மெர்சர் நிறுவனத்தின் கணிப்பின் படி 2017-ம் ஆண்டு இந்தியாவில் 10.8 சதவீதம் சம்பள உயர்வு.
வளர்ந்து வரும் ஆசிய பெசிபிக் பொருளாதாரத்தால் இந்தியா மற்றும் வியட்னாமில் உள்ளவர்களின் சம்பளம் 1.8 சதவீதம் மற்றும் 9.2 சதவீதமாக உயரும் என்றும் உலக ஆலோசனை நிறுவனம் ஒன்று அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மெர்சர் நிறுவனத்தின் கணிப்பின் படி 2017-ம் ஆண்டு இந்தியாவில் 10.8 சதவீதம் சம்பள உயர்வும், வியாட்னாமில் 9.2 சதவீதமும் சம்பள உயர்வும் கிடைக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் முறையே 4.2 மற்றும் 4.1 சதவீத சம்பள உயர்வும் இருக்கும் என்று மெர்சர் அறிக்கை "2017 இழப்பீடு திட்டமிடல்"-இல் கூறப்பட்டுள்ளது.
ஜப்பானில் மட்டும் குறைந்தபட்சமாக 2.2 சதவீத சம்பள உயர்வும், நியூசிலாந்தில் 2.8 சதவீதமும், ஆஸ்த்ரேலியாவில் 2.9 சதவீதமும் இருக்கும் என்று மெர்சர் வருடாந்த மொத்த ஊதியம் சர்வே கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications