மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 0.36 சதவீதம் அதாவது 94.98 புள்ளிகள், நிஃப்டி 0.48 சதவீதம் அதாவது 39.35 புள்ளிகள் சரிந்ததன.
மும்பை: உலக பங்குச் சந்தை சரிவுடன் துவங்கியதை அடுத்து இன்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் சரிவுடன் முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 0.36 சதவீதம் அதாவது 94.98 புள்ளிகள், நிஃப்டி 0.48 சதவீதம் அதாவது 39.35 புள்ளிகள் சரிந்ததன.
சில்லறை வர்த்தகத்தில் நவம்பர் மாதம் மட்டும் இரண்டு வருடக் குறைவான 3.63 சதவீதம் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3.39 சதவீதம் பணவீக்கத்தை பேற்றதை அடுத்து இதுவே அதிகம் என்றும் கூறப்படுகின்றது.
இன்று சென்செக்ஸில் ஆக்ஸிஸ் வங்கி 3.29 சதவீதம், ரிலையன்ஸ் 1.92 சதவீதம், இன்ஃபோஸிஸ் 0.95 சதவீதம், டாடா மோடார்ஸ் 0.57 சதவீதம், விப்ரோ 0.42 சதவீதம் லாபம் அடைந்த நிறுவனப் பங்குகள் ஆகும்.
அதே நேரம் இந்தியா கோல் நிறுவனப் பங்குகள் 4.37 சதவீதமும், ஓஎன்ஜிசி நிறுவனன் பங்குகள் 2.34 சதவீதமும், பாரதி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 2.24 சதவீதமும், பவர் கிரிட் 2 சதவீதமும், சில்பா 1.78 சதவீதமும் சரிவை சந்தித்தன.


Click it and Unblock the Notifications