மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுளை பெற உள்ளதாக நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இம்மாநில மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்.
மோடி அறிவிப்பால் கருப்புப் பணம் முதலைகள் முதல் சாமானிய மக்கள் வரை அனைத்துத் தரப்பினரும் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்ற வங்கிகளில் நாள் முழுவதும் நின்ற நிலையில், மத்திய அரசின் அடுத்தடுத்தக் கட்டுப்பாடுகள் மூலம் கருப்பு பண முதலைகள் சிக்கலில் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கிகள் பண மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற உள்ளதாக அறிவித்ததுள்ளது.
5000 கோடி ரூபாய்
மகாராஷ்டிரா மாநிலத்தின், மாநில வரவு கூட்டுறவு (DCC) வங்கிகள் மோடி செல்லாது என அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதாக அறிவித்த நவம்பர் 10 தேதியில் இருந்து நவம்பர் 14ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வைப்பு நிதியாகப் பெற்றுள்ளது.
விவசாயிகள் கணக்கு
மேலும் வைப்புச் செய்யப்பட்ட 5,000 கோடி ரூபாயில் பெரும் பகுதி விவசாயிகள் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த அறிவிப்பு மற்றும் 5000 கோடி ரூபாய் வைப்பு ஆகியவை அதிக அளவிலான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சோதனை
இந்நிலையில் இந்தியாவில் கூட்டுறவு வங்கிகளின் மத்திய வங்கியான NABARD வங்கி சந்தேகத்திற்குரிய வைப்புகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா அல்லது நிதி மோசடிகள் நடந்துள்ளதா எனச் சோதனை செய்யக் களத்தில் இறங்கியுள்ளது.
புகார்கள்
மேலும் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளோர், தனது கணக்கில் திடீரென்று மிகப்பெரிய அளவிலான தொகை வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் செய்துள்ளனர்.
31 வங்கிகள்
இம்மாநிலத்தில் உள்ள 31 DCC வங்கிகளில் பெரும்பாலானவை உள்ளூர் அரசியல் தலைவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு முன்பே பல முறை முறையற்ற வகையில் பணப் பரிமாற்றங்கள் இந்த வங்கிகளில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த 31 வங்கிகள் இம்மாநிலத்தில் சுமார் 3,800 கிளைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திடீர் மாற்றம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் இந்த 31 வங்கிகளின் 3,800 கிளைகளில் பல கிளைகளின் இருப்பு அளவுகள் வரலாறு காணாத அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது என NABARD வங்கி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைப்பு நிதிகள்
31 வங்கிகளின் 3800 கிளைகளில் வைப்புச் செய்யப்பட்ட 5000 கோடி ரூபாயில் சங்கில் DCC வங்கி 320 கோடி ரூபாயும், புனே DCC வங்கி 600 கோடி ரூபாய் அளவிலான வைப்பு நிதியாகப் பெற்றுள்ளது.
இவ்விரண்டு வங்கிகள் தொடங்கிப் பல வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளை NABARD வங்கி ஆய்வு செய்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications